உண்மையாவா.. சூப்பர்ஸ்டாருக்கு திடீரென போன் பண்ணாரா தல அஜித்.. என்ன விஷயமா இருக்கும்?

சென்னை: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 45வது ஆண்டு கொண்டாட்டங்கள் களைகட்டி வரும் நிலையில், தல அஜித் திடீரென ரஜினிகாந்துக்கு போன் செய்து பேசியுள்ளதாக தகவல் ஒன்று வைரலாகி வருகிறது.

Recommended Video

Rajinikanth early morning walking in Kelampakkam

கோலிவுட்டின் தற்போதைய டாப் நட்சத்திரங்கள் அனைவருமே ரஜினியை முன் உதாரணமாக கொண்டே செயல்பட்டு வருகின்றனர்.

நடிகர் அஜித்தும் ரஜினியை எளிமை உள்ளிட்ட பல விஷயங்களில் பின்பற்றி வருகிறார்.

பில்லா ரீமேக்

பில்லா ரீமேக்

அது எந்தளவுக்கு என்றால், சூப்பர்ஸ்டர் ரஜினிகாந்தின் பில்லா படத்தை அதே பெயரில் ரீமேக் செய்து பிளாக்பஸ்டர் கொடுக்கும் அளவுக்கு தல அஜித்துக்கும் சூப்பர்ஸ்டாருக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது. பல இடங்களிலும், மேடைகளிலும் நடிகர் அஜித்தை ரஜினிகாந்த் மனதார பாராட்டி உள்ளார்.

லீக்கான போன் கால்

லீக்கான போன் கால்

இந்திய திரை பிரபலங்களே வியந்து பார்க்கும் சூப்பர்ஸ்டாரான ரஜினிகாந்த், எந்தவொரு புதிய திறமையையும் உடனடியாக பாராட்டும் குணம் கொண்டவர். சமீபத்தில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இயக்குநர் தேசிங் ராஜாவுக்கு சர்ப்ரைஸாக அவர் போன் செய்து தனக்கு ஒரு கதை ரெடி பண்ணுங்க என பேசிய ஆடியோ லீக்கானது பெரிய சர்ச்சையை கிளப்பியது.

30 நிமிடம்

30 நிமிடம்

ரஜினிகாந்தின் 45வருட சினிமா வாழ்க்கை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், திடீரென தல அஜித், ரஜினிகாந்துக்கு கால் பண்ணி பேசியுள்ளதாக தகவல் ஒன்று வைரலாகி வருகிறது. அரை மணி நேரம் இந்த உரை நீடித்ததாகவும், ஆரோக்கியம் குறித்தும், சினிமா வாழ்க்கை குறித்தும் பல விஷயங்களை அஜித் கேட்டு அறிந்து கொண்டாராம்.

போட்டி இருக்காது

போட்டி இருக்காது

சமீபத்தில், அஜித்தின் வலிமை படமும் ரஜினியின் அண்ணாத்த படமும் அடுத்த ஆண்டு சம்மருக்கு நேரடியாக போட்டி போடும் என்ற கணிப்புகள் வைரலான நிலையில், நடிகர் அஜித்தின் போன் கால் அது குறித்து இருக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மேலும், இயக்குநர் சிவா அஜித்தின் நண்பர் என்பதால், அண்ணாத்த படத்துடன் போட்டி போட தான் விரும்பவில்லை என்பதை அஜித் உறுதிபடுத்தியிருக்கலாம் என்றும் யூகங்கள் கிளம்புகின்றன. ஆனால், இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X