twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தலைவா... வெற்றிகரமான நூறாவது நாள் போஸ்டர் அடிக்காம விட மாட்டாங்களாமே!

    By Shankar
    |

    தமிழ் சினிமாவில் ஒரு வியாதி.... படம் அட்டர் ப்ளாப் என்று அப்பட்டமாகத் தெரிந்த பிறகும், இதை பெருமை பீத்தலுக்காக 100 நாள் வரை ஓட்டுவது.

    இந்த ட்ரெண்டை தமிழில் ஆரம்பித்தது யாராக இருந்தாலும், அதிகமாகப் பயன்படுத்திய சாட்சாத் நம்ம விஜய்தான் (பேன்ஸ்ன்ற பேர்ல குதிக்காம, நிதானமா யோசிங்கப்பா!).

    முதன் முதலில் விஜய் நடித்த நாளைய தீர்ப்பில் ஆரம்பித்தது இந்த நூறு நாள் ஓட்டும் அழுகுணி ஆட்டம்.

    அப்போதெல்லாம் இதற்கென்றே நகரில் சில அரங்குகள் இருந்தன. மோட்சம், கிருஷ்ணவேணி, கமலா, இப்போது கோபிகிருஷ்ணா, ராதா... சில நேரங்களில் தேவி பாலா அல்லது கலா இவற்றில் ஏதாவது ஒரு உப்புமா படம் 100 நாள் காலைக் காட்சியாக ஓடி, அந்த ஆண்டின் நூறு நாள் பட லிஸ்டில் இடம் பிடித்துவிடும்.

    விஜய் நடித்த விஷ்ணு, தேவா, செந்தூரபாண்டி, மாண்புமிகு மாணவன், கோயமுத்தூர் மாப்பிள்ளை, ரசிகன், ஒன்ஸ்மோர், நிலாவே வா, என்றென்றும் காதல் போன்ற படங்களின் நூறு நாள் ஓட்டம், மேற்கூறிய திரையரங்குகள் ஏதாவது ஒன்றில் நடந்திருக்கும்.

    விஜய் பெரிய நடிகராகி, சில்வர் ஜூப்ளி படங்களைக் கொடுக்க ஆரம்பித்த பிறகும்கூட இந்த பழக்கத்தை அவரால் அல்லது அவர் தந்தையால் விடவே முடியவில்லை. சச்சின் என்றொரு படம் வந்தது நினைவிருக்கலாம். அந்தப் படத்தை வீம்புக்காக கமலா தியேட்டரில் மட்டும் நூறு நாட்கள் ஓட்டினார்கள். நூறாவது நாளன்று அந்தத் தியேட்டரில் பதினாறு பேர்தான் இருந்தார்கள்.

    நூறாவது நாளிலேயே இந்த நிலை என்றால், அடுத்த நூறு நாட்கள் எப்படி இருந்திருக்கும்! காலக் கொடுமை... அப்படியும் இன்னும் நூறு நாட்கள் ஓட்டி, அதை இருநூறு நாட்கள் ஓடிய படமாகக் காட்டினார்கள்.

    இதோ இப்போது தலைவா படம்...

    இந்தப் படம் எப்படி வெளியானது என சினிமா ரசிகர்கள் எல்லோருக்குமே தெரிந்ததுதான். வெளி மாநிலங்களிலெல்லாம் ரிலீசாகி, படம் தேறாது என எல்லோரும் ஒருமனதாக பிறகுதான் தமிழகத்தில் வெளியிட முடிந்தது.

    வெளியான முதல் வாரமே பெரும்பாலான திரையரங்குகளில் தூக்கிவிட்டார்கள். ஆனால் அசராமல் தரணியெங்கும் அதிரடி வெற்றி என்ற அறிவிப்போடு 10வது நாள் போஸ்டர் அடித்தார்கள். சென்னையில் நான்கைந்து அரங்குகளில் கூட ஓடாத நிலையில், ஏகப்பட்ட தியேட்டர்கள் பெயரைப் போட்டு மகத்தான 25வது நாள் என அடுத்த விளம்பரத்தையும் வெளியிட்டார்கள்.

    சரி இத்தோடு விட்டுவிடுவார்கள் என்று பார்த்தால், பேபி ஆல்பட் தியேட்டர் பெயரைப் போட்டு வெற்றிகரமான 50 வது நாள் என போஸ்டர்- பேப்பர் விளம்பரங்கள்!

    இந்த நிலையில்தான் படத்தை நூறு நாட்கள் ஓட்டாமல் விடப்போவதில்லை என்பதில் தீவிரமாக உள்ளார்களாம். அதாவது ஜனங்க பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் பணம் கொடுத்தாவது படத்தை நூறு நாட்கள் வரை ஓட்டுவது!

    விஜய் படங்கள் என்றல்ல... மக்களிடம் தோற்றுப் போன பெரிய நட்சத்திரங்களின் குப்பைப் படங்களை வெட்டியாக ஓட்டும் அத்தனைப் பேருக்குமே இந்த விமர்சனம் பொருந்தும்.

    எதுக்கு இதெல்லாம்.... பேசாம தியேட்டர் பெயரே போடாமல் (ரிலீசாகி) வெற்றிகரமான 100வது நாள்னு போஸ்டர் அடிச்சி ஒட்டிக்கிங்கப்பா!

    English summary
    Reports say that the producers of Vijay starring Thalaiva are still run the movie as single show in theater to save their pride.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X