twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கத்துக்க சொன்னா காப்பி அடிச்சு வச்சிருக்கியே நெல்சா... பாவம் தலைவரு

    |

    சென்னை : பீஸ்ட் படத்தை வைத்து ஏற்கனவே டைரக்டர் நெல்சன் திலீப்குமாரை நெட்டிசன்கள் கண்டபடி கலாய்த்து, கழுவி ஊற்றி வருகின்றனர். இந்த சமயத்தில் தலைவர் 169 கதை பற்றிய அப்டேட்கள் வெளியாகி நெல்சனுக்கு புது சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட விஜய்யின் பீஸ்ட் படத்தை டைரக்டர் நெல்சன் திலீப்குமார் இயக்கினார். ஏப்ரல் 13 ம் தேதி ரிலீசான பீஸ்ட் படம் வர்த்தக ரீதியாக 200 கோடிக்கும் மேல் வசூல் பார்த்தது. ஆனாலும் அந்த படம் மோசமான கமெண்ட்களையே பெற்றது. ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய தவறியதால் இதை தோல்வி படம் என்றே சொல்கிறார்கள்.

    பீஸ்ட் பட ரிலீசுக்கு முன்பே ரஜினியின் தலைவர் 169 படத்தை இயக்கும் வாய்ப்பு நெல்சனுக்கு கிடைத்தது. ஆனால் பீஸ்ட் படம் மோசமான விமர்சனங்களை பெற்றதால் பீஸ்ட் படத்தை மட்டுமல்ல தலைவர் 169 படத்திற்காகவும் சேர்த்து நெல்சனை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வந்தனர்.

    தளபதி 66 படத்தைவிட மாஸ் காட்டும் தளபதி 67.. எப்ப சார் அறிவிப்பீங்க..ஆவலாய் கேள்வி கேட்கும் ரசிகர்கள் தளபதி 66 படத்தைவிட மாஸ் காட்டும் தளபதி 67.. எப்ப சார் அறிவிப்பீங்க..ஆவலாய் கேள்வி கேட்கும் ரசிகர்கள்

    விக்ரமிற்காக வழிவிடும் படங்கள்

    விக்ரமிற்காக வழிவிடும் படங்கள்

    இந்த சமயத்தில் லோகேஷ் கனகராஜ் கமலை வைத்து இயக்கிய விக்ரம் படம் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. ரிசான 10 நாட்களில் 300 கோடி வசூலை கடந்துள்ளது. தொடர்ந்து வசூலை குவித்து வருகிறது. விக்ரம் படத்தின் மிரட்டலால் பல படங்களின் ரிலீஸ் தேதிகள் தள்ளி வைக்கப்பட்டு வருகின்றன. இதை குறிப்பிட்டும், எப்படி படம் இயக்க வேண்டும் என லோகேஷை பார்த்து கத்துக் கோங்க என நெல்சனை கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

    போதும் நிறுத்துங்க

    போதும் நிறுத்துங்க

    ஒருவரை வேலையை வைத்து கிண்டல் செய்து காயப்படுத்தாதீர்கள். யாருடனும் யாரையும் ஒப்பிடாதீர்கள், நெல்சன் என்னுடைய நண்பர். அவரை பற்றி இவ்வாறு பேசுவது வருத்தம் அளிக்கிறது. தயவு செய்து இப்படி பேசாதீர்கள் என லோகேஷ் ரசிகர்களை கேட்டுக் கொண்டார். இதற்காக அவரை பாராட்டிய சமயத்தில், நெல்சன் பற்றிய ட்ரோல்கள் சற்று குறைந்தன.

    தலைவர் 169 கதை இதுவா

    தலைவர் 169 கதை இதுவா

    இந்த சமயத்தில் தலைவர் 169 படத்தின் டைட்டில், கதைகளம் பற்றிய தகவல்கள் கசிந்துள்ளன. அதாவது, தலைவர் 169 படம் கைதிகள், சிறைச்சாலை ஆகியவற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படமாம். அதனால் தான் அதன் அடிப்படையில் படத்திற்கு சாம்ராட், ஜெயிலர், பாஸ், கிரிமினல் போன்ற பெயர்களில் ஒன்றை டைட்டிலாக வைக்க ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஜெயிலர் என்ற டைட்டிலை வைத்து ரசிகர்கள் போஸ்டரை கூட உருவாக்கி, வெளியிட்டிருந்தனர்.

    லோகேஷ் கதையவே சுட்டுடீங்களா

    லோகேஷ் கதையவே சுட்டுடீங்களா

    தலைவர் 169 பற்றிய இந்த தகவலை ரசிகர்கள் ஒருபுறம் கொண்டாடி வந்தாலும், மற்றொரு புறம் இதை வைத்தும் நெல்சனை கலாய்த்து வருகின்றனர். லோகேஷ் கனகராஜை பார்த்து எப்படி படம் எடுப்பது என கத்துக்கோங்க என்றால், அவரோட கதையையே சுட்டுட்டீங்களா. அவர் ஸ்டைலில் தான் படம் எடுப்பீங்களா நெல்சன். பீஸ்ட் படத்தில் கூர்கா உள்ளிட்ட சில படங்களை உல்டா பண்ணினீங்க. இப்போ தலைவர் 169 கதையை லோகேஷ் படத்தில் இருந்தே சுட்டுட்டீங்களா என கலாய்த்து வருகின்றனர்.

    தலைவர் 169 யும் அவ்வளவு தானா

    தலைவர் 169 யும் அவ்வளவு தானா

    லோகேஷ் கனகராஜின் கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்கள் சிறைக் கைதிகள், சிறை வாழ்க்கை பற்றியே அமைக்கப்பட்டிருக்கும். இந்த படங்களின் கதைகள் கூட ஒன்றுக்குகொன்று தொடர்புடையது என கூறப்பட்டது. இந்த சமயத்தில் தலைவர் 169 படமும் லோகேஷ் பட கதையை போன்றது தான் என்ற தகவலால் நெல்சன் மீது ரசிகர்களுக்கு இருக்கும் கோபம் அதிகரித்துள்ளது. தலைவர் 169 படத்தையும் சொதப்ப பிளான் பண்ணிட்டார் போல என கூறி வருகின்றனர்.

    Recommended Video

    Marmayogi , Marudhanayagam Release பற்றி பேசிய கமல் | Vikram Success Meet | *Kollywood
    இப்போ என்ன செய்ய போகிறார் ரஜினி

    இப்போ என்ன செய்ய போகிறார் ரஜினி

    பீஸ்ட் படத்திற்கு கிடைத்த மோசமான விமர்சனங்களால் தலைவர் 169 படத்தில் சமரசம் செய்து கொள்ள விரும்பாததால் தான், தலைவர் 169 படத்தின் திரைக்கதையை சரியாக வடிவமைக்க கே.எஸ்.ரவிக்குமாரை ரஜினி அழைத்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சமயத்தில் லோகேஷ் கனகராஜ் படத்தின் சாயல் போலவே தலைவர் 169 படத்தின் கதையையும் நெல்சன் உருவாக்கி உள்ளார் என்ற தகவல் காட்டுத் தீ போல் கோலிவுட்டில் பரவி வருகிறது. இதனால் நெல்சன் மீது தலைவர் 169 படக்குழு செம காட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ரஜினி அடுத்து என்ன முடிவு செய்ய போகிறார் என்பதை தெரிந்து கொள்ள அனைவரும் ஆர்வமாக உள்ளனர்.

    English summary
    According sources Rajinikanth's Thalaivar 169 story based on criminals, jails. So movie makers consider to title for the movie like Samrat, Boss, Jailor, Criminal. Netizens trolls that is Nelson copy Lokesh Kanagaraj's story. Usually Lokesh had making the stories based on Jail and criminals.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X