Vijay Party: கட்சிப் பெயரில் பிழை..'க்' பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய்!

சென்னை: விஜய் தன்னுடைய கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என்று பெயர் வைத்து அந்த பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து, 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் நேரடியாக போட்டியிட உள்ளார். விஜய் கட்சி பெயரை அறிவித்த நாளில் இருந்தே பேசுபொருளாகி இருக்கும் 'க்' எழுத்துக்கு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் விஜய்.

விஜய் மக்கள் இயக்கம் சமீபகாலமாக அரசியல் நிகழ்வுகளில் அதிக ஆர்வம் காட்டி வந்தது. நடிகர் விஜய்யும் பல்வேறு அணி நிர்வாகிகளுடன் அவ்வப்போது ஆலோசனையில் ஈடுபட்டு, இயக்கம் சார்பில் பல புதிய திட்டங்களை செயல்படுத்தி வந்தார். சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் மாநில பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை கூட்டி, மாவட்ட நிர்வாகிகளுடன் விஜய் அவ்வப்போது ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், விஜய் புதிய கட்சி தொடங்க இருப்பதாகவும், கட்சித் தலைவராக அவரே செயல்படுவார் என்றும் தகவல் வெளியானது.

Is Thalapathy Vijay party name officially changed

புதிய கட்சி தொடங்கினார்: இதையடுத்து கடந்த 4 ஆம் தேதி டெல்லியில் இந்திய தேர்தல் ஆணையத்தில் நடிகர் விஜய் தலைமையிலான கட்சியின் பெயரை விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பதிவு செய்தார். அதன்படி தமிழக வெற்றி கழகம் என கட்சியின் பெயரை அறிவிப்பு வெளியானது. இதைத்தொடர்ந்து, கட்சியின் தலைவர் என்ற முறையில் நடிகர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அதில், என்னால் முடிந்த வரை, தமிழக மக்களுக்கு இன்னும் முழுமையாக உதவ வேண்டும் என்பது எனது நீண்டகால எண்ணம். எண்ணித் துணிக கருமம் என்பது வள்ளுவர் வாக்கு. அதன்படியே, தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் எனது தலைமையில் அரசியல் கட்சி தொடங்கப்பட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றத்துக்கு வழிவகுப்பதுதான் நமது இலக்கு. தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைத்த பிறகு, வரும் மக்களவை தேர்தல் முடிந்தவுடன் தமிழ்நாடு சார்ந்த கொள்கைகளின் வெற்றிக்கும், தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்குமான, எமது கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள், கொடி, சின்னம் மற்றும் செயல்திட்டங்களை முன்வைத்து, மக்கள் சந்திப்பு நிகழ்வுகளுடன், தமிழ்நாட்டு மக்களுக்கான நமது அரசியல் பயணம் தொடங்கும் என்றார்.

Is Thalapathy Vijay party name officially changed

இலக்கணப்பிழை: விஜய் தனது கட்சியின் பெயரை அறிவித்தது முதல், கட்சியின் பெயரில் பிழை இருப்பதைச் சுட்டிக் காட்டி ஒரு தரப்பினர் கேலி செய்தனர். அதாவது,விஜய்யின் கட்சிப் பெயரில் வெற்றி எனும் வார்தைக்கு அருகில் ' க் ' இல்லாமல் போனது இலக்கணப்பிழை என பல விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து, இலக்கணப்பிழையை திருந்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

(க்) பிரச்சனை: இந்நிலையில், தற்போது கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக வெற்றிக் கழகம் தலைவரின் உத்தரவின் பேரில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் உட்கட்சி கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், சென்னை பனையூரில் உள்ள தலைமை நிலைய செயலக அலுவலகத்தில் நாளை 19ந் தேதி காலை 9 மணி அளவில் நடைபெற உள்ளது. நமது கழகத்தின் மாவட்ட தலைமை நிர்வாகிகள் இக்கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கை மூலம் (க்) பிரச்சனைக்கு விஜய் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X