twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நேர்கொண்ட பார்வைக்கு நெருக்கடி.. அஜித் படத்தை கார்னர் செய்யும் தயாரிப்பாளர் சங்கம்.. காரணம் இதுவா?

    நேர்கொண்ட பார்வை படத்திற்கு நெருக்கடி ஏற்படுத்தும் வகையில் தயாரிப்பாளர் சங்கம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    |

    Recommended Video

    Nerkonda Paarvai Strike : மீண்டும் சிக்கலை சந்தீக்கும் நேர்கொண்ட பார்வை- வீடியோ

    சென்னை: தயாரிப்பாளர் சங்கம் விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள், அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை என்று கோலிவுட் வட்டாரத்தில் முணுமுணுக்கப்படுகிறது.

    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும், சேலம் ஏரியா விநியோகஸ்தர்கள் கவுன்சிலும் அவசர ஆலோசனைக்கூட்டம் ஒன்றை நடத்தி முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றி இருக்கிறார்கள்.

    அதன்படி, ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன், விஷால், தனுஷ், விஜய் சேதுபதி, சிம்பு, ஜெயம்ரவி, ராகவா லாரன்ஸ் விக்ரம் மற்றும் பெரிய பட்ஜெட் படங்களுக்கு இனி சேலம் ஏரியாவில் 45 டிஜிட்டல் பிரிண்டுகள் மட்டுமே ரிலீஸ் செய்வது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    டிஜிட்டல் பிரிண்ட்கள்:

    டிஜிட்டல் பிரிண்ட்கள்:

    சேலம் ஏரியாவை பொறுத்தவரை டாப் ஹீரோக்களின் படங்கள் குறைந்தபட்சம் 65 டிஜிட்டல் பிரிண்ட்கள் ரிலீஸ் செய்யப்படும். அதாவது 65 திரையரங்குகள் அல்லது ஸ்கிரீன்களில் திரையிடப்படும். அப்போது தான் வியாபாரம் அதிகமாக நடைபெறும். இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கம் திடீரென இப்படியொரு நிபந்தனை விதித்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

    நேர்கொண்ட பார்வைக்கு பிரச்சினை:

    நேர்கொண்ட பார்வைக்கு பிரச்சினை:

    குறிப்பாக தயாரிப்பாளர் சங்கத்தின் இந்த புதிய கட்டுபாடுகள் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை மையப்படுத்தியே எடுக்கப்பட்டுள்ளதாக பேசப்படுகிறது. நேர்கொண்ட பார்வை திரைப்படம் வரும் 8ம் தேதி வெளியாகிறது. விஸ்வாசம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதால், இந்த படத்தை அதிக திரையரங்குகளில் வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். இந்த வேளையில் தயாரிப்பாளர் சங்கத்தின் இந்த அறிவிப்பு, நேர்கொண்ட பார்வை படத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

    ஆலோசனை கமிட்டி:

    ஆலோசனை கமிட்டி:

    ஆனால் தயாரிப்பாளர்கள் சங்கத்தை பொறுத்தவரை தற்போது இருப்பது ஆலோசனைக் கமிட்டி மட்டுமே. தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படாதவர்கள் தான் தற்போது நிர்வாகிகளாக உள்ளனர் என்பதால், அவர்கள் எடுக்கும் எந்த முடியும் யாரையும் கட்டுப்படுத்தாது என்ற பேச்சும் இருக்கிறது.

    சேலம் சிண்டிகேட்:

    சேலம் சிண்டிகேட்:

    இது ஒருபுறம் இருக்க சேலம் ஏரியாவை பொறுத்தவரை விநியோகஸ்தர்கள் சங்கத்தைவிட, அங்குள்ள சில முக்கிய புள்ளிகள் தான் வலுவானவர்கள் என்று கூறப்படுகிறது. அந்த சிண்டிகேட்டை உடைக்கவே தயாரிப்பாளர்கள் சங்கம் இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாக பேசப்படுகிறது.

    8ம் தேதி தெரியும்:

    8ம் தேதி தெரியும்:

    ஆனால் தயாரிப்பாளர்கள் சங்கத்தால் அந்த சிண்டிகேட்டை எதுவும் செய்ய முடியாது என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். இது எல்லாமே வரும் 8ம் தேதி தெரிந்துவிடும் என்கிறார்கள். நேர்கொண்ட பார்வை படத்திற்கு சேலம் ஏரியாவில் எத்தனை டிஜிட்டல் பிரிண்டுகள் போடப்படுகின்றன என்பதை பொறுத்தே தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வலிமை தெரியவரும்.

    English summary
    The reliable sources says that the Tamil film producers council's new restrictions for top hero movies is taken based on the release of Ajith's Nerkonda Parvai.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X