இன்று தளபதி 65 ஃபஸ்ட்லுக்... அப்படி என்ன சிறப்பு இருக்கும் ?

சென்னை : நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் தளபதி 65. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நிறைவடைந்தது.

இரண்டாம் கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்த திட்டமிட்டது. ஆனால், கொரோனா இரண்டாம் காரணமாகவும், லாக்டவுன் காரணமாகவும் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. படப்பிடிப்பை மீண்டும் ஜுலை மாதத்தில் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.

விஜய் பிறந்தநாள் ட்ரீட்

விஜய் பிறந்தநாள் ட்ரீட்

இந்நிலையில் விஜய்யின் பிறந்தநாள் நாள் கொண்டாடப்பட உள்ளதால், அவரது ரசிகர்களுக்கு பிறந்தநாள் ட்ரீட்டாக தளபதி 65 படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை இன்று மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளதாக சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. இதனை குட்டி ஸ்டோரி பாடல் வரியான, "கொஞ்சம் சில் பண்ணு மாப்பி" வாசகத்துடன் தெரிவித்துள்ளது.

தளபதி 65 டைட்டில் வெளியாகுமா

தளபதி 65 டைட்டில் வெளியாகுமா

இந்த ஃபர்ஸ்ட்லுக்கில் அப்படி என்ன இருக்கும் என்பது பற்றிய எதிர்பார்ப்பும் அனைவரின் மனதிலும் எழுந்துள்ளது. தளபதி 65 படத்தின் ஃபஸ்ட்லுக்கில் விஜய்யின் மாஸ் ஸ்டில்லுடன் தளபதி 65 படத்தின் டைட்டில் இடம்பெற அதிக வாய்ப்புள்ளது. ஏற்கனவே இது பற்றிய யூகங்களாக பல பெயர்கள் சோஷியல் மீடியாவில் பரவி வருகிறது.

Recommended Video

Ronaldo Vs Thalapathy ரெண்டு பேருக்கும் பெரிய ஒற்றுமை | COCO COLA
மாஸ் டைட்டிலாக இருக்கும்

மாஸ் டைட்டிலாக இருக்கும்

ராஜா என்ற பெயர் இருக்கலாம் என்று ஒரு பேச்சு அடிபடுகிறது. ஆனால் ஏற்கனவே அஜித் - ஜோதிகா நடித்த ஒரு படம் ராஜா என்ற பெயரில் வெளியாகி உள்ளதால் அந்த டைட்டிலை வைக்க வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது. அதே சமயம், விஜய்க்கான மாஸை அதிகரிக்கும் வகையிலேயே டைட்டில் இருக்கும் என்றே கூறப்படுகிறது.

லிட்டில் ஸ்டோரி பாட்டு தான் க்ளூவா

லிட்டில் ஸ்டோரி பாட்டு தான் க்ளூவா

ஆனால் மாஸ்டர் படத்தின் பாடல் வரிகளை குறிப்பிட்டு சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பு படத்தின் டைட்டிலுக்கான க்ளூவாக கூட இருக்கலாம். இன்று மாலை ஃபர்ஸ்ட்லுக்குடன் தளபதி 65 பற்றிய வேறு ஏதாவது ஹாட் அப்டேட்டும் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X