எதிர்பாராததை எதிர்பாருங்கள்.. பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் டபுள் எவிக்ஷனுக்கு வாய்ப்பு இருக்காம்!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் டபுள் எவிக்ஷனுக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிறைவடைய இன்னும் 40 நாட்களுக்கும் குறைவாகவே உள்ளன.
6 வார காலம் மட்டுமே உள்ள நிலையில், பிக் பாஸ் வீட்டில் 12 பேர் இருப்பதால் இந்த வாரம் இரண்டு பேரை வெளியேற்ற பிக் பாஸ் குழு திட்டமிட்டுள்ளதாக கூறுகின்றனர்.

12 பேர்
ராஜு, சிபி, சஞ்சீவ், இமான் அண்ணாச்சி, அமீர், அபிநய், நிரூப், வருண் என மொத்தம் 8 ஆண் போட்டியாளர்களும் தாமரை செல்வி, பிரியங்கா, அக்ஷரா மற்றும் பாவனி என 4 பெண் போட்டியாளர்கள் என மொத்தம் 12 பேர் இன்னும் பிக் பாஸ் வீட்டில் உள்ளனர்.

டபுள் எவிக்ஷன்
அதன் காரணமாக இந்த வாரம் டபுள் எவிக்ஷன் நிச்சயம் இருக்கும் என தகவல் பரவி வருகிறது. இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து அதிரடியாக வெளியேறப் போகும் அந்த இரு போட்டியாளர் யார் யார் என ரசிகர்கள் தலையை பிய்த்துக் கொண்டு யோசித்து வருகின்றனர்.

அபிநய் வெளியேறுவாரா
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடர்ந்து விளிம்பில் தொங்கிக் கொண்டிருக்கும் அபிநய் இந்த வாரமாவது பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவாரா? என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆனால், அபிநய்க்கு பாவனி மற்றும் பிரியங்கா ஆர்மியினர் ஓட்டுப் போட்டு காப்பாற்றி உள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

ஆண் போட்டியாளர்கள்
இந்த வாரம் வெளியேறப் போகும் அந்த இரண்டு பேருமே ஆண் போட்டியாளர்களாக இருக்குமா? என்கிற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஏற்கனவே அதிக ஆண்கள் இருப்பதால் பாத்ரூம் பஞ்சாயத்துகள் தொடர்ந்து எழுந்து வரும் நிலையில், இரண்டு ஆண் போட்டியாளர்கள் குறைந்தால் நல்லா இருக்கும் என்கிற கருத்து எழுந்துள்ளது.

ரசிகர்கள் கணிப்பு
அபிநய் மற்றும் நிரூப் இந்த வாரம் வெளியேறினால் நன்றாக இருக்கும் என ஏகப்பட்ட ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். இமான் அண்ணாச்சி மற்றும் நிரூப் வெளியேறவும் அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் மற்றொரு தரப்பினர் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

அன் அஃபிஷியல் வோட்டிங்
ஆனால், அன் அஃபிஷியல் வோட்டிங்கில் இந்த வாரம் அதிக வாக்குகளை பெற்று அபிநய் டாப்பில் உள்ளார் என்றும், இமான் அண்ணாச்சி மற்றும் அக்ஷரா தான் கடைசி இடத்தில் குறைவான ஓட்டுக்களை பெற்று இடம் பிடித்துள்ளனர் எனக் கூறப்படுகிறது. வைல்டு கார்டு என்ட்ரியாக வந்த அமீரும் இமான் அண்ணாச்சி உடன் நெருக்கமாக போட்டியில் இடம்பெற்று இருப்பதால் இந்த வாரம் வெளியேறப் போவது யார் என்பதை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். நாளை ஷூட்டிங் முடிந்ததும் எவிக்ட் ஆன போட்டியாளர் குறித்த தகவல் கசிந்து விடும்.


Click it and Unblock the Notifications











