Don't Miss!
- Finance
குவாட் மாநாடு: 5 வருடத்தில் 50 பில்லியன் டாலர் முதலீடு.. இந்தியாவுக்கு ஜாக்பாட்..!
- News
தனலட்சுமியின் நள்ளிரவு அலறல்.. 15 வயது சிறுவனின் கொடூரம்.. காரணமே மாமியார்தான்..!
- Sports
அடடே..!! தோல்விக்கு சூப்பர் காரணம் சொன்ன சஞ்சு சாம்சன்.. மீண்டு வருவோம் என நம்பிக்கை.. ஐபிஎல் டமாஷ்
- Technology
உங்கள் Facebook கணக்கு ஹேக் செய்யப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..
- Automobiles
இந்த பைக் வாங்கும் விலையில் 4 கார் வாங்கலாம் ஆனால் காரிகளில் இல்லாத விஷயங்கள் இந்த பைக்கில் இருக்கிறது...
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் சொத்துக்களை விற்பதில் கவனமாக முடிவெடுக்கவும்...
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஆஹா...செம மேட்டரா இருக்கே...இதுதான் சிம்புவின் கொரோனா குமார் கதையா?
சென்னை : சிம்பு அடுத்ததாக நடிக்க உள்ள கொரோனா குமார் படத்தின் கதை பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே படத்தின் டைட்டில் படம் பற்றிய எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள நிலையில், தற்போது கதை பற்றிய தகவல் ஆர்வத்தை அதிகம் தூண்டுவதாக அமைந்துள்ளது.
மாநாடு படத்தை தொடர்ந்து சிம்பு தற்போது கெளதம் மேனன் இயக்கும் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஐசி கணேசனின் வேல்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்க உள்ளது. இதைத் தொடர்ந்து சிம்பு அடுத்தபடியாக நடிக்க உள்ள படத்தையும் வேல்ஸ் இன்டர்நேஷனல் தான் தயாரிக்க போவதாக ஏற்கனவே சொல்லி விட்டார்கள்.
பேச்சுலர்
இயக்குனருடன்
கூட்டணி
அமைக்கும்
நடிகர்
கார்த்தி!

கொரோனா குமார் ரிலீஸ்
வெந்து தணிந்தது காடு படத்தை முடித்த கையோடு, கொரோனா குமார் படத்தின் ஷுட்டிங்கை சிம்பு துவக்க உள்ளதாகவும், இந்த படமும் 2022 ம் ஆண்டிற்குள் ரிலீஸ் செய்யப்படும் என சமீபத்தில் பேட்டி ஒன்றில் ஐசரி கணேசன் தெரிவித்திருந்தார். டைரக்டர் கோகுல் இயக்க உள்ள கொரோனா குமார் முழுக்க முழுக்க காமெடி கலந்த படமாக இருக்கும் என கூறப்படுகிறது.

எப்போ ஷுட்டிங்
சிம்புவின் 48 வது படமாக உருவாக உள்ள கொரோனா குமார் படத்தின் டைரக்டர் யார் என்பதை வெளியிட்ட கையோடு, படத்தின் ஃபஸ்ட் கிளிம்ப்சையும் வெளியிட்டு இருந்தனர். வெந்து தணிந்தது காடு படத்தின் ஷுட்டிங் இன்னும் ஒரு வாரம் எடுக்கப்பட வேண்டிய காட்சிகள் மட்டும் மீதமுள்ளதாக ஐசரி கணேசனே கூறி விட்டார். அதனால் பிப்ரவரி முதல் வாரத்தில் கொரோனா குமார் படத்தின் ஷுட்டிங் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தான் கதையா
லேட்டஸ்டாக வெளியாகி உள்ள தகவலின் படி, தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் நபரான சிம்புவை மருத்துவ நிபுணர் குழு வலைவீசி தேடி வருகிறது. ஆனால் அவர்களை ஏமாற்றி விட்டு ஜாலியாக சுற்றி திரிகிறார் சிம்பு. நோயின் தீவிரத்தை உணராமல் அனைவரிடமும் சகஜமாக ஒட்டி உறவாடி வருகிறார். பிறகு ஒரு வழியாக சிம்புவை கண்டுபிடிக்கும் மருத்துவ குழு, சிம்புவிற்கு சோதனை செய்து, பாசிடிவ் என்பதை உறுதி செய்கிறார்கள். அடுத்து என்ன நடக்கிறது என்பது தான் படத்தின் மீதி கதையாம்.

அட செம மேட்டரா இருக்கே
கொரோனா பரவல், அதன் ஆபத்தை பற்றி நகைச்சுவை கலந்து சொல்ல உள்ளனராம். ஆனால் இது தான் கதையா என்பது உறுதியாக தெரியவில்லை. அதே சமயம் விஜய்யின் தளபதி 66 படத்திற்கு இணையாக ஷுட்டிங் தேதி, ரிலீஸ் தேதி என அனைத்தையும் இப்போதே சொல்லி விட்டார்கள். அதோடு சேர்ந்து கதையும் வெளியாகி உள்ளது ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது.