பெண்கள் விஷயத்தில் இந்த வாரிசு நடிகர் நல்லவரா, நல்லவர் மாதிரி நடிக்கிறாரா?

By Siva

சென்னை: வாரிசு நடிகர் ஒருவர் ரொம்ப நல்லவர் மாதிரி பேசுவதை நம்ப முடியவில்லை என்கிறார்கள் கோலிவுட்காரர்கள்.

வாரிசு நடிகர் ஒருவருக்கு வயது ஏறிக் கொண்டு போனாலும் இன்னும் சிங்கிளாக உள்ளார். அவர் வாழ்வில் காதல் வருவதும் போவதுமாக உள்ளது. அண்மையில் கூட அவரின் பெயர் அண்டை மாநிலத்தை சேர்ந்த நடிகை ஒருவருடன் அடிபட்டது.

Is this actor a good man?

அந்த நடிகையோ தான் ஏற்கனவே காதலித்தவரிடம் திரும்பி சென்றுவிட்டார் என்று கூறப்படுகிறது. வாரிசு நடிகர் தன்னை காதலித்த பெண் பிரிந்துவிட்டால் அவருடன் நெருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள், எழுதிய கடிதங்களை வெளியிட்டு அசிங்கப்படுத்திவிடுவாராம்.

அவர் காதலித்த ஒரு நடிகையுடன் சேர்ந்து எடுத்த கசமுசா புகைப்படம் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது. அந்த புகைப்படத்தை நடிகர் தான் வேண்டும் என்றே லீக் செய்தார் என்று கூறப்பட்டது. ஆனால் அவரோ அதை யார் கசியவிட்டது என்றே தெரியவில்லை என்று தற்போது கூறியுள்ளாராம்.

ஒரு பொம்பளபுள்ள வாழ்க்கையில் விளையாடக் கூடாது என்று நடிகர் பேசியதை கேட்டவர்களால் அவர்களின் காதுகளையே நம்ப முடியவில்லையாம். வாரிசு நடிகர் ஒரு நடிகையை குறுகிய காலம் காதலித்தார்.

அந்த நடிகை பிரிந்து சென்றபோது அவரின் புகைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை. அதற்கு காரணம் நடிகையின் அம்மா எடுத்த அதிரடி நடவடிக்கை என்று அப்பொழுது பேச்சாக கிடந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X