பிக்பாஸ் சீசன் 5...முதல் Wildcard என்டரி இவரா....செம ட்ரீட்டா இருக்கும் போலயே

சென்னை : விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்கி வருகிறார். அக்டோபர் 3 ம் தேதி துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி, வெற்றிகரமாக இரண்டாவது வாரத்தை எட்டி உள்ளது.

இந்த சீசனில் அதிகபட்சமாக 18 பேர் போட்டியாளர்களாக பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர். முந்தைய சீசன்களை போல் இல்லாமல் மிகவும் ஜாலியாக இந்த சீசன் சென்று கொண்டிருக்கிறது. பிக்பாஸ் வரலாற்றிலேயே முதல் முறையாக திருநங்கையான நமீதா மாரிமுத்து, போட்டியாளராக சேர்க்கப்பட்டார்.

வெளியேறிய நமீதா மாரிமுத்து

வெளியேறிய நமீதா மாரிமுத்து

ஆனால் நிகழ்ச்சி துவங்கிய ஒரு வாரத்திலேயே தவிர்க்க முடியாத காரணங்களால் நமீதா, வீட்டை விட்டு வெளியேறியதாக அறிவிக்கப்பட்டது. இது ரசிகர்கள், போட்டியாளர்கள் உள்ளிட்ட அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. மருத்துவ காரணங்களால் நமீதா பிக்பாஸ் போட்டியில் இருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது. அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஒரு தகவலும் வெளியாகி உள்ளது.

சலசலக்க துவங்கிய வீடு

சலசலக்க துவங்கிய வீடு

தற்போது 17 பேர் போட்டியாளர்களாக உள்ள நிலையில் இன்று முதல் எமிலினேஷன் ப்ராசஸ் வேறு துவங்க உள்ளது. ஏற்கனவே நேற்று நடத்தப்பட்ட லைக், டிஸ்லைக் கேம்மால் போட்டியாளர்கள் இடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது. குரூப்பிசம் வேறு உருவாகி உள்ளது. ஹவுஸ்மெட்கள் பற்றி அபிஷேக் கூறிய ரெவ்யூ, இமான் அண்ணாச்சி உள்ளிட்ட சிலரை அதிருப்தி அடைய வைத்துள்ளது.

 இந்த தேதியில் Wildcard என்ட்ரி

இந்த தேதியில் Wildcard என்ட்ரி

இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலாக பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியின் ஹாட் அப்டேட் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 15 வது நாளில், அதாவது அக்டோபர் 17 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, முதல் Wildcard என்ட்ரியாக புதிய போட்டியாளர் ஒருவர் பிக்பாஸ் வீட்டிற்குள் போக போகிறாராம். பிக்பாஸ் சீசன் 5 ல் முதல் Wildcard என்ட்ரி என்பதால் ரசிகர்கள் இதை ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

இவர் தான் அடுத்த என்ட்ரியா

இவர் தான் அடுத்த என்ட்ரியா

முதல் Wildcard என்ட்ரியாக உள்ளே செல்ல போவது வேறு யாரும் இல்லை. நடிகை ஷாலு ஷம்மு தானாம். வருத்தப்படாத வாலிபர் சங்கம், மிஸ்டர் லோக்கல், இரண்டாம் குத்து போன்ற படங்களில் நடித்து, சோஷியல் மீடியாக்களில் கவர்ச்சியால் அனைத்து ரசிகர்களையும் கட்டி போட்டு வைத்துள்ள ஷாலு ஷம்மு தான் இப்போது பிக்பாஸ் போட்டியாளராக வீட்டிற்குள் செல்ல போகிறாராம்.

இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்

இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்

Me too போராட்டத்தின் போது முக்கிய ஆளாக குரல் கொடுத்து கோலிவுட்டில் பரபரப்பை கிளப்பியவர் ஷாலு ஷம்மு. அதற்கு பிறகு தொடர்ந்து அத்துமீறிய கவர்ச்சி காட்டி ஃபோட்டோஷுட் நடத்தி, அந்த ஃபோட்டோக்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு லைக்குகளை அள்ளி குவித்தார். இப்போது ஷாலு ஷம்மு பிக்பாஸ் வீட்டிற்குள் வேறு போக உள்ளது, ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X