twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஏகே 62 ஹீரோயின் நயன்தாரா இல்லையா?...இவர் தானாமே...இது செம மேட்டரா இருக்கே

    |

    சென்னை : சினிமா, பைக் ரைட், துப்பாக்கிச் சுடுதல் என அனைத்தையும் ஒன்றாக பேலன்ஸ் செய்து, அனைத்திலும் டாப்பாக இருந்து வருபவர் அஜித். தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிக்கும் ஏகே 61 படத்தில் நடித்து வருகிறார்.

    ஏகே 61 படத்தின் இறுதிக்கட்ட ஷுட்டிங்கிற்காக அஜித் தயாராகி வருகிறார். சஞ்சய் தத், மஞ்சுவாரியர் உள்ளிட்டோர் நடிக்கும் இந்த படத்தின் ஷுட்டிங் செப்டம்பர் மாத இறுதியில் முடிவடைய உள்ளதாக சொல்லப்படுகிறது.

    அதே சமயம் அஜித் அடுத்ததாக நடிக்க உள்ள ஏகே 62 படத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, அதற்கான ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகளை டைரக்டர் விக்னேஷ் சிவன் ஏற்கனவே துவங்கி செய்து வருகிறார். இந்நிலையில் ஏகே 62 படம் பற்றி பல சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகி வருகிறது.

    பார்த்தேன் ரசித்தேன் 22 ஆண்டு கொண்டாட்டம்..லைலாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரசாந்த்!பார்த்தேன் ரசித்தேன் 22 ஆண்டு கொண்டாட்டம்..லைலாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரசாந்த்!

    ஏகே 62 ஹீரோயின் நயன்தாரா கிடையாதா?

    ஏகே 62 ஹீரோயின் நயன்தாரா கிடையாதா?

    ஏகே 62 டீமுக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறும் தகவலின் படி, விக்னேஷ் சிவன் இயக்கும் இந்த படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்க, அனிருத் இசையமைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் ஹீரோயினாக நயன்தாரா நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டு வந்தது. இதற்காக நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

    இவர் தான் அஜித்திற்கு ஜோடியா?

    இவர் தான் அஜித்திற்கு ஜோடியா?

    ஆனால் லேட்டஸ்ட் தகவலின் படி, ஏகே 62 படத்திற்கான ஃபர்ஸ்ட் சாய்ஸ் நயன்தாரா கிடையாது. ஐஸ்வர்யா ராய் தான் என சொல்லப்படுகிறது. இதற்காக கடந்த வாரமே ஐஸ்வர்யா ராயிடம் முதல் கட்ட பேச்சை விக்னேஷ் சிவன் துவக்கி விட்டதாக சொல்லப்படுகிறது. ஒருவேளை அவர் ஓகே சொல்லி விட்டால், 23 ஆண்டுகளுக்கு பிறகு அஜித் படத்தில் ஐஸ்வர்யா ராய் நடிப்பார்.

    இது செம மேட்டரா இருக்கே

    இது செம மேட்டரா இருக்கே

    இவர்கள் இருவரும் ஏற்கனவே 2000 ம் ஆண்டில் டைரக்டர் ராஜீவ் மேனன் இயக்கத்தில் ரிலீசான கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் நடித்துள்ளனர். ஆனால் அந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக தபுவும், ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியாக மம்முட்டியும் நடித்திருந்தனர்.இதனால் இவர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்து நடிப்பார்களா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    ஏகே 62 ஷுட்டிங் எப்போ

    ஏகே 62 ஷுட்டிங் எப்போ

    ஏகே 61 படத்தின் ஷுட்டிங் செப்டம்பரில் முடிவடையும் என சொல்லப்படுவதால், ஏகே 62 படத்தின் ஷுட்டிங் இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டின் துவக்கத்தில் துவங்கப்படலாம் என சொல்லப்படுகிறது. இது கிராமத்து சப்ஜெக்ட் என்றும், மதுரையை மையமாகக் கொண்ட கதை என்றும் சொல்லப்படுகிறது.

    English summary
    The latest buzz about 'AK 62' is that Aishwarya Rai Bachchan is the first choice to play the female lead and that Vignesh Shivan held initial round of the talks with her last week. If she comes on board then she will be reuniting with Ajith after 23 years.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X