»   »  கேட்டியளா சேதியை... அனுஷ்காவும் இல்லை, தமன்னாவும் இல்லை... பிரபாஸின் மணமகள் இவராமே!

கேட்டியளா சேதியை... அனுஷ்காவும் இல்லை, தமன்னாவும் இல்லை... பிரபாஸின் மணமகள் இவராமே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பாகுபலி நாயகன் பிரபாஸ் திருமணம் செய்து கொள்ளப்போகும் பெண் இவர் தான் என கடந்த சில நாட்களாக பெண் ஒருவரின் புகைப்படம் ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

வசூலில் சாதனை படைத்து பிரபாஸை உலகம் முழுவதும் பிரபலப் படுத்தியது ராஜமௌலியின் பாகுபலி படம். தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இந்நிலையில், பாகுபலி படப்பிடிப்பின் போது அனுஷ்காவுக்கும், பிரபாஸுக்கும் இடையே காதல் மலர்ந்ததாக தகவல்கள் வெளியானது. பாகுபலி 2 ரிலீசுக்குப் பின்னர் இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்பட்டது.

தமன்னா...

தமன்னா...

இதேபோல், தமன்னாவின் பெயரும் பிரபாஸுடன் இணைத்து பேசப்பட்டது. பாகுபலி படத்தின் மகன் கேரக்டர் பிரபாஸிற்கு தமன்னா ஜோடியாக நடித்திருந்தார்.

வருங்கால மனைவி...

வருங்கால மனைவி...

இந்நிலையில், கடந்த சில தினங்களாக தெலுங்கு ஊடகங்களிலும், சமூக வலைதளப் பக்கங்களிலும் பிரபாஸின் வருங்கால மனைவி இவர் தான் என பெண் ஒருவரின் புகைப்படம் வலம் வருகிறது.

பொறியியல் பட்டதாரி...

பொறியியல் பட்டதாரி...

மேலும், நடிகைகளை பிரபாஸிற்கு திருமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தார் விரும்பவில்லை என்றும், அதனால் கோதாவரியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான இப்பெண்ணை பிரபாஸிற்கு திருமணம் செய்ய முடிவு செய்யப் பட்டிருப்பதாகவும் கூறப்பட்டது.

அடுத்தாண்டு திருமணம்...

அடுத்தாண்டு திருமணம்...

அதோடு, பாகுபலி இரண்டாம் பாகம் ரிலீசானதும் அடுத்தாண்டு டிசம்பர் பிரபாஸிற்கும், அப்பெண்ணிற்கும் திருமணம் என்றும் கூறப்பட்டது. இதனால் அனுஷ்காவும், தமன்னாவும் சோகத்தில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.

வதந்தி...

வதந்தி...

ஆனால், பரபரப்பாக வலம் வந்த இந்தச் செய்தி தற்போது வதந்தி என உறுதியாகியுள்ளது. காரணம் அதில் காணப்படும் பெண், நடிகை பிரியா லால் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

English summary
Telugu superstar Prabhas is rumoured to get married very soon if the latest buzz is to be believed. A picture of a girl rumoured to be Prabhas' fiance was going viral in social media.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil