twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அரசை எதிர்த்தால் இனி விதவிதமாக ரெய்டு கன்ஃபர்ம்... பாஜக அரசின் மெஸேஜ் இதுதான்!

    By Shankar
    |

    சென்னை: இனி அரசுக்கு எதிராக யார் குரல் கொடுத்தாலும் ரெய்டு உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைகள் பாயும் என்பதை பகிரங்கமாகவே காட்டியுள்ளது மத்திய பாஜக அரசு, விஷால் அலுவலகத்தில் நடத்தியுள்ள ஜிஎஸ்டி ரெய்டு மூலம்.

    பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி போன்றவற்றால் மிக அதிகமாக பாதிக்கப்பட்டது சினிமா துறை. ஜிஎஸ்டிக்கு எதிராக ஆரம்பத்திலிருந்தே கோலிவுட்டில் குரல் கொடுத்து வருகின்றனர். குறிப்பாக தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்க தலைவராகவும், நடிகர் சங்க செயலாளராகவும் உள்ள விஷால், இப்போது வரை ஜிஎஸ்டியை எதிர்த்து வருகிறார். மத்திய அரசுக்கு எதிரான கருத்துக்கள் சொன்ன மெர்சல் படத்துக்கும் ஆதரவு அளித்துள்ளார்.

    Is this BJPs direct warning to Kollywood?

    இந்த நிலையில்தான் அவரது தயாரிப்பு அலுவலகத்துக்கு கலால் துறையிலிருந்து ஜிஎஸ்டி கண்காணிப்பு அதிகாரிகள் சென்று சோதனை நடத்தி வருகின்றனர்.

    அலுவலகத்தில் விஷாலோ அவரது மேலாளரோ இல்லாத நிலையில் இந்த சோதனை நடந்து வருகிறது.

    அரசுகளுக்கு எதிராக திரைத் துறையினர் சொல்லும் கருத்துக்களுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. அரசுகளுக்கு எதிரான கருத்து சொல்லும் படங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. இதை முற்றாகத் தடுக்க முயல்கின்றன மத்திய மாநில அரசுகள்.

    அதற்கு ஒரு ஆயுதமாகவே இந்த ரெய்டு நடவடிக்கைகளை கையிலெடுக்கின்றன. இதற்கு முன்பு வரை இதுபோன்ற ரெய்டுகளில் ஏதாவது உண்மை இருக்கும் என நம்பினர் மக்கள். ஆனால் இன்று விஷால் அலுவலகத்தில் நடந்துள்ள ரெய்டு விஷாலை அச்சுறுத்தும் நடவடிக்கையே என நம்பத் தொடங்கிவிட்டனர்.

    அடுத்து மெர்சல் தயாரிப்பாளர் தேனாண்டாள் நிறுவனம், நடிகர் விஜய் அலுவலகங்களிலும் இதே ரக ஜிஎஸ்டி ரெய்டு நடக்கும் என்று தகவல் பரவி வருகிறது.

    English summary
    Tamil Cinema personalities slammed GST raid at Vishal office as a threat to freedom of speech
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X