இதை நம்பலாமா.. சியான் விக்ரம் 58வது படத்தின் டைட்டில் லீக்?

Recommended Video

Is this the title of Chiyaan Vikram's next? இதை நம்பலாமா.. ?

சென்னை: அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் 'விக்ரம் 58' படத்தின் டைட்டில் 'அமர்' என்ற தகவல் இணையத்தில் கசிந்து வைரலாகி வருகிறது.

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவாகி வரும் 'விக்ரம் 58' படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக கே.ஜி.எஃப் நாயகி ஸ்ரீனிதி ஷெட்டி நடித்துள்ளார்.

கே.எஸ். ரவிக்குமார் மற்றும் கோமாளி இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பிரபல கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் முதன்முறையாக 'விக்ரம் 58' படத்தின் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார்.

20 கெட்டப்

20 கெட்டப்

‘விக்ரம் 58' படத்தில் நடிகர் விக்ரம் 20 கெட்டப்புகளில் நடித்து வருவதாக அண்மையில் ஒரு தகவல் உலா வருகிறது. தசாவதாரம் படத்தில் நடிகர் கமல்ஹாசன் 10 கெட்டப்புகளில் நடித்திருந்த நிலையில், சியான் விக்ரமை 20 கெட்டப்புகளில் பார்க்க முடியுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

துருவ நட்சத்திரம்

துருவ நட்சத்திரம்

எனை நோக்கிப் பாயும் தோட்டா வெளியாகியுள்ள நிலையில், கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் நீண்ட நாட்களாக கிடப்பில் கிடக்கும் துருவ நட்சத்திரம் படம் எப்போது திரைக்கு வரும் என்றும், ஜானுக்காக வெயிட்டிங் எனவும் ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ‘விக்ரம் 58' படத்தை முடித்த கையோடு நடிகர் விக்ரம் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக நடிக்கவுள்ளார். கெளதம் மேனனின் துருவ நட்சத்திரம் படத்திற்கு இன்னும் 60 நாள் ஷூட்டிங் தேவை படும் நிலையில், எந்த படத்துக்கு விக்ரம் முன்னுரிமை கொடுக்கவுள்ளார் என்பது விரைவில் தெரிந்துவிடும்.

அமர்

'விக்ரம் 58' படத்தின் டைட்டில் 'அமர்' என்ற தகவல் தற்போது கசிந்துள்ளது. விக்ரம் ரசிகர்கள் அமர் டைட்டிலுக்கான ஃபேன் மேட் போஸ்டர்களை உருவாக்கி இணையத்தில் டிரெண்ட் செய்து வருகின்றனர். ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.

கோப்ரா

அமர் டைட்டிலை விட விக்ரம் 58 படத்திற்கு கோப்ரா என்ற டைட்டில் தான் கச்சிதமாக இருக்கும் என சில விக்ரம் ரசிகர்கள் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அமரா? கோப்ராவா? என்ற போலிங்கும் ட்விட்டரில் களைகட்டி வருகிறது.

More from Filmibeat

Read more about: vikram விக்ரம்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X