Don't Miss!
- Finance
ஊழியர்கள் சம்பளத்தை இரட்டிப்பாக்கும் மைக்ரோசாப்ட்.. என்ன காரணம்?
- News
ப.சிதம்பரம் திகார் சிறைக்கு செல்ல வாய்ப்பு! கார்த்தி சிதம்பரத்திற்கு ஆபத்தில்லை..! ஹெச்.ராஜா அதிரடி!
- Sports
ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை.. ராகுல் திரிபாதி மரண பேட்டிங்.. ஒரே ஓவரில் ஆட்டத்தை மாற்றிய மும்பை
- Automobiles
இதை யாரும் எதிர்பாக்கவே இல்ல... ஹூண்டாய் நிறுவனத்தை பாக்கவே பாவமா இருக்கு... என்ன ஆச்சு தெரியுமா?
- Technology
ரூ.20,000 விலைப்பிரிவு: அறிமுகமான ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் பதிப்பு- 12 ஜிபி ரேம், 67வாட்ஸ் சூப்பர் ஃப்ளாஷ் சார்ஜிங்
- Lifestyle
மேங்கோ கிரனிட்டா
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஆஹா...இது செம ட்விஸ்டா இருக்கே...பணப்பெட்டியுடன் வெளியேறியவர் இவர் தானா ?
சென்னை : பிக்பாஸில் இந்த வாரம் பணப்பெட்டி டாஸ்க் நடத்தப்பட்டு வருகிறது. செவ்வாய்கிழமை எபிசோடில் ரூ.3 லட்சம் பணம் இருக்கும் சூட்கேசுடன் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தார் சரத்குமார். புத்திசாலிதனமாக முடிவெடுக்கவும் சொல்லி விட்டு சென்றார்.
தொகை குறைவாக இருந்ததால் போட்டியாளர்கள் யாரும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இதனால் நேற்று காலை ரூ.5 லட்சமாக இந்த தொகை உயர்த்தப்பட்டது. அதற்கு பிறகு போட்டியாளர்கள் சிலரின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டு, அனைவரும் இது பற்றி பேச துவங்கினர்.
ஹேப்பி
பர்த்
டே
ஏ.ஆர்.ரஹ்மான்...ஆஸ்கார்
நாயகன்
பற்றி
யாரும்
அறியாத
அரிய
தகவல்கள்
இதோ

படிப்படியாக உயர்ந்த தொகை
இந்நிலையில் நேற்று தொடர்ந்து இந்த தொகை 6 லட்சம், 7 லட்சம், 9 லட்சம் என படிப்படியாக உயர்த்தப்பட்டது. பணப்பெட்டியை வைத்தே இரண்டு எபிசோட்களை முடித்து விட்டீர்களே என நெட்டிசன்கள் கலாய்த்ததாலோ, இல்லை சண்டை இல்லாமல் சுவாரஸ்யம் குறைகிறது என நினைத்ததாலோ நேற்றைய எபிசோடில் லக்சுரி பட்ஜெட் டாஸ்க், இறுதிப் போட்டிக்கு உங்களை உறுதி செய்வதற்கு என சொல்லி இரண்டும் கலந்த ஒரு டாஸ்க் நடத்தப்பட்டது.

புது டாஸ்க்
இதனால் வீட்டில் சண்டை, வாக்குவாதம் உள்ளிட்டவைகள் வழக்கம் போல் நடைபெற்றது. வழக்கம் போல் நிரூப்பிற்கு எதிராக அனைவரும் பேசினர். நிரூப் - பிரியங்கா சண்டை நடைபெற்றது. ராஜுவும் வழக்கம் போல் சண்டையில் தலையிடாமல் அமைதி காத்தார்.

பிளான் பண்ணிய பிரியங்கா
இதற்கிடையில் பணப்பெட்டியை யார் எடுப்பது என போட்டியாளர்கள் பேசி வந்தனர். பெரிய தொகையாக வந்தால் தானே எடுத்துக் கொண்டு வெளியேற உள்ளதாக பிரியங்கா சொன்னார். தொகை எவ்வளவு உயர்கிறது என பார்க்கலாம் என அமீரிடம் சொல்லிக் கொண்டிருந்தார் பிரியங்கா.

மூவரில் யார்
பணத்தை தாமரை அல்லது பாவனி எடுக்க தான் அதிக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு வந்தது. எல்லோரிடமும் கருத்து கேட்டு வந்ததால் கடைசியில் நிரூப் தான் எடுக்க போகிறார் எனவும் சிலர் எதிர்பார்த்தனர். பரிசுத் தொகை ரூ.25 லட்சம் வரை உயர்த்தப்படும் என நிரூப் சொல்லி இருந்தார். 15 லட்சம் வைத்தால் தான் யோசிப்பதாக பாவனியும் கூறி இருந்தார்.

இவர் தான் எடுத்தாரா
லேட்டஸ்ட் தகவலின்படி நேற்று இரவு இந்த தொகை ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டது. இதுவரை யாரும் எதிர்பார்க்காத விதமாக சிபி அந்த பணத்தை எடுத்துக் கொண்டு பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த எபிசோட் இன்று ஒளிபரப்பாக உள்ளதாம்.