என்னது பிக்பாஸ் 5 டைட்டில் வின்னர் இவரா... அப்போ எல்லாமே ஸ்கிரிப்ட் தானா ?
சென்னை : விஜய் டிவி.,யில் ஒளிபரப்பப்படும் அதிகமான ரசிகர்களை கவர்ந்த நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் நான்கு சீசன்கள் நிறைவடைந்து விட்டது. ஐந்தாவது சீசன் அக்டோபர் 3 ம் தேதி, பிரம்மாண்ட விழாவாக துவங்கி நடைபெற்று வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் 100 முதல் 108 நாட்கள் வரை போட்டியாளர்கள் தனி வீட்டில் தங்க வைக்கப்பட்டிருப்பார்கள். இவர்களுக்கு பலவிதமான டாஸ்க்குகள் வழங்கப்படும். இதில் மக்களின் ஓட்டுக்களை பெற்று இறுதிவரை தாக்கபிடிப்பவரே போட்டியின் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். இதில் ஒவ்வொரு வாரமும் வெளியேற வேண்டியவர்களை மக்கள் அளித்த ஓட்டுக்களின் அடிப்படையில் தேர்வு செய்து வெளியேற்றுகிறார்கள்.

அதிகரிக்கும் ரசிகர்கள்
ஆனால் இது ரியாலிட்டி ஷோ கிடையாது. ஒரு விளம்பரத்திற்காக இந்த நிகழ்ச்சியை நடத்துகிறார்கள். ஸ்கிரிப்ட் படி தான் எல்லாம் நடக்கிறது என ஏராளமானவர்கள் கூறி வருகிறார்கள். ஆனால் இதனை நம்ப மறுத்து உலகம் முழுவதிலும் உள்ள பலர் இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்களாக உள்ளனர்.

வெளியேற போவது யார்
இதுவரை இல்லாத அளவிற்கு பிக்பாஸ் சீசன் 5 ல் அதிகபட்சமாக 18 பேர் போட்டியாளர்களாக தேர்வு செய்யப்பட்டு களமிறக்கப்பட்டனர். இவர்களில் இதுவரை நமிதா மாரிமுத்து, நாடியா சாங், சின்னபொண்ணு, அபிஷேக் ராஜா ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். அடுத்து வெளியேற போவது யார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

ஸ்கிரிப்ட் என்பது உண்மையா
இதற்கிடையில் பிக்பாஸ் நிகழ்ச்சி ரியாலிட்டி ஷோ கிடையாது. அனைத்தும் ஸ்கிரிப்ட் என ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். இருந்தாலும் இந்த நிகழ்ச்சியை பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறையவில்லை. தொடர்ந்து அதிகமானவர்கள் இந்த நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர்.

இவர் தான் டைட்டில் வின்னரா
தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி 34 நாட்களை எட்டி உள்ளது. இந்நிலையில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் அதற்குள் டைட்டில் வின்னர், ரன்னர் அப் போன்ற விபரங்கள் அடங்கிய புதிய பட்டியல் ஒன்று இணையத்தில் வெளியாகி, வைரலாகி வருகிறது. இந்த பட்டியலின் படி ராஜு தான் டைட்டில் வின் பண்ண போகிறாராம். பிரியங்கா ரன்னர் அப் வாங்க போகிறாராம்.

லிஸ்ட் கூட வந்துடுச்சா
இது மட்டுமல்ல, எந்த வாரத்தில் யார் வெளியேற போகிறார் என்ற லிஸ்ட்டும் வெளியாகி உள்ளது. இதனை பார்த்து விட்டு, அப்படியானால் எல்லாமே ஸ்கிரிப்ட் என சொல்லப்படுவது உண்மை தானா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். இருந்தாலும் இந்த லிஸ்ட் படி தான் அடுத்தடுத்த எவிக்ஷன்கள் நடத்தப்பட போகிறதா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம் என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

சுவாரஸ்யம் குறையுமே
இந்த ஒட்டுமொத்த லிஸ்ட்டும் வெளியாகி உள்ளதால் இனி பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் எண்ணிக்கை குறையும். நிகழ்ச்சி மீதான சுவாரஸ்யம் குறையும் என சிலர் அச்சம் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











