Don't Miss!
- News
முதுபெரும் தலைவர் நல்லக்கண்ணுக்கு உடல் நலம் பாதிப்பு..ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை
- Finance
சென்செக்ஸ் 670 புள்ளிகள் சரிவு.. 2 முக்கியக் காரணம்..!!
- Technology
108எம்பி ரியர் கேமரா கொண்ட புதிய ஒப்போ 5G போனின் அறிமுக தேதி வெளியானது.! ரெடியா இருங்க..!
- Sports
திறமைகளை வளர்த்து கொள்ளுங்கள்.. இல்லை சூர்யகுமாரால் ஆபத்து வரும்.. நெஹ்ரா கொடுத்த எச்சரிக்கை
- Automobiles
ஷோரூம்களுக்கு வர தொடங்கிய மாருதியின் விலை குறைவான கார்! திருவிழா மாதிரி பொதுமக்கள் கூட்டம் கூடுதாம்!
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி இந்த நபர்கள் எதிரிகளை விட ஆபத்தானவர்களாம்... இவங்கள பக்கத்துலேயே சேர்க்காதீங்க...!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
என்னது இவரும் வைல்காடு என்ட்ரியா...உருடுக்கட்டை வேற காத்திருக்காமே
சென்னை : பிக்பாஸ் அல்டிமேட்டில் வைல்கார்டு என்ட்ரியாக மற்றொரு சர்ச்சைக்குரிய பிக்பாஸ் பிரபலம் உள்ளே அனுப்பப்பட போகிறாராம். தான் உள்ளே போக உள்ளதை அவரே ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் உருட்டுக்கட்டை காத்திருக்கு என சொல்லி பயப்படவும் வைத்துள்ளார்.
14 போட்டியாளர்களுடன் 24 மணி நேர நிகழ்ச்சியாக பிக்பாஸ் ஓடிடி வெர்சனான பிக்பாஸ் அல்டிமேட் துவங்கப்பட்டு, விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இதில் முதல் வாரத்திலேயே சுரேஷ் சக்கரவர்த்தி எவிக்ஷன் மூலம் வெளியேற்றப்பட்டுள்ளார். இவர் வெளியேற்றப்பட்டதை ரசிகர்கள் பலரும் விரும்பவில்லை.
3 நாட்களில் 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ட்ரெண்டிங்கில் சிவகார்த்திகேயனின் பே பாடல்!

டிரெண்டிங் பிளேயர் வனிதா
வந்த நாள் முதல் வனிதா செய்த அலப்பறைகளால் அவர் மீது தான் ரசிகர்கள் கடுப்பாகி உள்ளனர். அவர் குறைவான ஓட்டுக்களுடன் இருந்ததால் அவர் தான் முதல் ஆளாக வெளியேறுவார் என நினைத்த நிலையில், சுரேஷ் சக்கரவர்த்தியை வெளியேற்றி உள்ளனர். இந்த வாரமும் வனிதாவை காப்பாற்ற டிரெண்ட் பிளேயர் என்ற புதிய விஷயத்தை கொண்டு வந்துள்ளனர். இதனால் ரசிகர்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள்.

ஜுலியை
இந்நிலையில் இரண்டாவது வாரத்திற்கான நாமினேஷன் இன்று நடத்தப்பட்டது. ஆனால் இது கடந்த வாரத்தை போல் இல்லாமல் ஓப்பன் நாமினேஷனாக நடத்தப்பட்டது. பிக்பாஸ் அல்டிமேட்டின் முதல் ஓப்பன் நாமினேஷன் இதுவாகும். இதில் அதிகமானவர்கள் ஜுலியை நாமினேட் செய்தனர். இதற்கிடையில் டிரெண்டிங் பிளேயர் ஒவ்வொரு வாரமும் தேர்வு செய்யப்பட்டு, நாமினேஷனில் இருந்து காப்பாற்றப்படுவார் என கூறப்பட்டுள்ளதால் இனி போட்டியாளர்கள் அனைவருமே இறங்கி விளையாடுவார்கள் என்ற நிலை உள்ளது.

இரண்டு வைல்கார்டு என்ட்ரி
பிக்பாஸ் அல்டிமேட்டில் 16 பேர் போட்டியாளர்களாக கலந்து கொள்வார்கள் என்றார்கள். ஆனால் இதுவரை 14 பேர் மட்டுமே வீட்டிற்குள் அனுப்பப்பட்டுள்ளனர். மீதமுள்ள இரவர் வைல்கார்டு என்ட்ரியாக அனுப்பப்பட உள்ளனர். ஏற்கனவே ஓவியா வைல்கார்டு என்ட்ரியாக உள்ளே வர போகிறார். அவர் தற்போது தனிமையில் இருப்பதாகவும், இந்த வாரம் முதல் வைல்கார்டு என்ட்ரி நடக்கும் என்றும் கூறப்படுகிறது.

என்னது...உருட்டுக்கட்டையா
இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 5 ல் கன்டென்ட் கொடுத்து, பரபரப்பை கிளப்பிய அபிஷேக் ராஜாவிடம் இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர், பிக்பாஸ் அல்டிமேட் வைல்கார்டு என்ட்ரியாக உள்ளே போக வாய்ப்புள்ளதா என கேட்டுள்ளார். இதற்கு, ஆமாம். இந்த வாட்டி சாக்கு மூட்டைல அனுப்ப போறாங்க. கண்ணீர் விட்டு கதறுற மாதிரி வனிதா அக்காவை உருட்டு கட்டையோட ஓப்பன் பண்ண சொல்லிருக்காங்க என பதிலளித்துள்ளார் அபிஷேக்.

அப்போ அப்படி...இப்போ...
பிக்பாஸ் சீசன் 5 ல் எலிமினேஷனில் வெளியேற்றப்பட்டு விட்டு, வைல்கார்டு என்ட்ரியாக வந்த அபிஷேக்கை பெரிய சைஸ் அட்டை பெட்டிக்குள் வைத்து அனுப்பினர். இதை திறந்த போது, உள்ளே இருந்து அபிஷேக் இருந்ததை பார்த்து மற்ற போட்டியாளர்கள் அலறி கத்தினர்.