அடேங்கப்பா...சமந்தா போட்டு வந்த கவர்ச்சி கவுன் இவ்வளவு காஸ்ட்லியா?
சென்னை : சமீபத்தில் விருது விழாவிற்கு படுகவர்ச்சியாக சமந்தா அணிந்து வந்த கவுன் அனைவரையும் திகைக்க வைத்தது. தற்போது இந்த உடையின் விலை பற்றிய தகவல் வெளியாகி அனைவரையும் வாயை பிளக்க வைத்துள்ளது.
தென்னிந்திய மொழிகளில் டாப் ஹீரோயினாக இருப்பவர் சமந்தா. இவர் தற்போது தெலுங்கில் சகுந்தலம், தமிழில் காத்து வாக்குல ரெண்டு காதல் படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த படங்கள் விரைவில் ரிலீசாக உள்ளன. இதைத் தொடர்ந்து தெலுங்கில் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் சமந்தா.

சமந்தானாலே டிரெண்டிங் தான்
கடந்த ஆண்டு கணவர் நாக சைதன்யா உடனான விவாகரத்தை அறிவித்த பிறகு அனைவரின் கவனமும் சமந்தாவை சுற்றி தான் உள்ளது. அவர் என்ன செய்தாலும் அது பரபரப்பான செய்தி ஆகி விடுகிறது. சமந்தா போடும் ஒவ்வொரு போஸ்ட்டும் டிரெண்டிங் ஆகி விடுகிறது. இவை போதாது என அடிக்கடி கவர்ச்சி போட்டோக்களையும் வெளியிட்டு சோஷியல் மீடியாவை கிறங்க வைக்கிறார் சமந்தா.

கவர்ச்சி உடையில் வந்த சமந்தா
அப்படி சமீபத்தில் மும்பையில் நடந்த விருது வழங்கும் விழா ஒன்றிற்கு ஹாலிவுட் நடிகைகள் ரேஞ்சிற்கு படு கவர்ச்சியான கவுனில் வந்தார் சமந்தா. இது தான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பிகினி கட் லோ நெக் வைத்த க்ளீன் அண்ட் பிளாக் காம்போவில் இந்த கவுன் வடிவமைக்கப்பட்டிருந்தது. நீளமான அந்த கவுனில் கீழே எம்பிராய்டரி, ஜமிக்கி வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

டிரெண்டி கேர்ள்
காதில் சிறியதாக ஒரு வைர கம்மல் மட்டும் அணிந்து, பெரிய அளவில் மேக்அப், ஹேர் ஸ்டைல் ஏதும் செய்யாமல் மிக சாதாரணமாக அதே சமயம் ஹைடெக் உடையில் வந்து அனைவரையும் வாய் பிளக்க வைத்தார் சமந்தா. இதே உடையில் போட்டோஷுட்டும் நடத்தி, அந்த போட்டோக்களையும் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்திருந்தார் சமந்தா. இதை ரசிகர்கள் மட்டுமல்ல பிரபலங்கள் பலரும் புகழ்ந்து கமெண்ட் செய்திருந்தனர்.

என்னது இவ்வளவு காஸ்ட்லியா
சமந்தாவின் இந்த ஆடையை வடிவமைத்தவர் அவரின் ஆடைவடிவமைப்பாளர் ப்ரீதம் ஜுகல்கர் தானாம். பிளாக் ஹைஹீல்ஸில் மயங்க வைக்கும் இந்த லுக்கிற்காக தயார் செய்தவர்கள் கெளரி - நைனிகா ஃபேஷன்ஸ் டிசைனர்கள் தானாம். அனைவரையும் மயங்க வைத்துள்ள சமந்தா அணிந்து வந்த கவுனின் விலை ரூ.1.80 லட்சமாம். இந்த தகவலை கேட்டு பலரும் ஆச்சரியப்பட்டு போய் உள்ளனர். இவ்வளவு காஸ்ட்லியான ஆடையையா சமந்தா அணிந்து வந்தார் என கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











