24-ல் வெளியாகிறது அறிவிப்பு.. விஜய் ஆண்டனியின் 'பிச்சைக்காரன் 2' படத்தின் டைரக்டர் இவர்தான்..!

By

சென்னை: விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2 படத்தை இயக்கப் போவது யார் என்பது தெரியவந்துள்ளது.

Recommended Video

மனிதன் Vijay Sethupathi Photo shoot Making • வீடே ஒரு சிறை

விஜய் ஆண்டனி நடித்து, கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம், 'பிச்சைக்காரன்'.

இந்தப் படம் தெலுங்கிலும் பல புதிய சாதனைகளை படைத்தது. டப் செய்யப்பட்டு அங்கு வெளியான இந்தப் படம் நூறு நாட்களை கடந்து ஓடியது.

வியாபார மார்க்கெட்

வியாபார மார்க்கெட்

விஜய் ஆண்டனி, சட்னா டைட்டஸ், தீபா ராமானுஜம், பகவதி பெருமாள், கோவிந்த மூர்த்தி உட்பட பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். சசி இயக்கிய இந்தப் படத்துக்கு விஜய் ஆண்டனி இசை அமைத்திருந்தார். 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியான இந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. விஜய் ஆண்டனிக்கு பெரிய வியாபார மார்க்கெட்டை உருவாக்கிய இந்தப் படத்தின் பாடல்களும் சூப்பர் ஹிட்டாகின.

அடுத்த பாகம்

அடுத்த பாகம்

இந்தப் படத்தின் அடுத்த பாகத்துக்கான கதையை எழுதி வருவதாக, விஜய் ஆண்டனி கடந்த சில மாதங்களுக்கு முன், தெரிவித்திருந்தார். கடந்த சில மாதமாக இதன் ஸ்கிரிப்டை எழுதி வருவதாகவும் முதல் பாகத்தை இயக்கிய சசி மற்றப் படங்களில் பிசியாக இருப்பதால், இரண்டாம் பாகத்தை அவர் இயக்கவில்லை என்றும் கூறியிருந்தார்.

அற்புதமான ஆண்டு

அற்புதமான ஆண்டு

இந்நிலையில், வரும் 24 ஆம் தேதி விஜய் ஆண்டனிக்கு பிறந்த நாள். அன்று அவரது புதிய படம் குறித்த அறிவிப்பையும் இயக்குனர் யார் என்பதையும் அந்தப் படக்குழு வெளியிட இருக்கிறது. இதுபற்றி விஜய் ஆண்டனி கூறும்போது, ' இதுகுறித்த அறிவிப்பு கண்டிப்பாக ஆச்சரியமிக்கதாக இருக்கும். மேலும் விவரங்களுக்கு காத்திருங்கள். 2021ஆம் ஆண்டு சினிமாவுக்கு அற்புதமான ஆண்டாக அமையப் போகிறது.

பிரியா கிருஷ்ணசாமி

பிரியா கிருஷ்ணசாமி

நேர் மறையான கருத்துக்களையே என் படங்களில் வலியுறுத்துவது வழக்கம். இந்தப் படமும் அப்படியே' என்று கூறியிருந்தார். இந்நிலையில் இந்தப் படத்தை தேசிய விருது பெற்ற இயக்குனர் ஒருவர் இயக்குவதாகக் கூறியிருந்தனர். இதற்கிடையே பிரியா கிருஷ்ணசாமி இந்தப் படத்தை இயக்க இருக்கிறார் என்று செய்தி வெளியாகி இருக்கிறார். இவர் தேசிய விருது பெற்ற பாரம் படத்தை இயக்கியவர்.

அக்னி சிறகுகள்

அக்னி சிறகுகள்

நடிகர் விஜய் ஆண்டனி, இப்போது, பாபு யோகேஸ்வரன் இயக்கியுள்ள 'தமிழரசன்', நவீன் இயக்கும் 'அக்னி சிறகுகள்', 'வாய்மை' செந்தில்குமார் இயக்கும் 'காக்கி' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மற்றும் 'மெட்ரோ' ஆனந்த கிருஷ்ணன், விஜய் மில்டன் மற்றும் பாலாஜி கே.குமார் ஆகியோர் இயக்கும் படங்களிலும் நடிக்க இருக்கிறார். இதற்கிடையே, பிச்சைக்காரன் 2 படத்திலும் நடிக்க உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X