அதுக்கு இவ்ளோ செலவா? மூச்.. இதுதான் நடிகை காஜல் அகர்வாலின் மாலத்தீவு ஹனிமூன் ட்ரிப் செலவாம்ல!

By

சென்னை: நடிகை காஜல் அகர்வாலின் ஹனிமூன் ட்ரிப் செலவு இவ்வளவு என ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது.

பாரதிராஜா இயக்கிய பொம்மலாட்டம் மூலம் தமிழில் அறிமுகமானவர், காஜல் அகர்வால்.

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர், இந்தியிலும் நடித்து வருகிறார்.

முடிந்தது மும்பை சாகா

முடிந்தது மும்பை சாகா

இவர் நடிப்பில், பாரீஸ் பாரீஸ் வர இருக்கிறது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனின் இந்தியன் 2, நடன இயக்குனர் பிருந்தாவின் ஹேய் சினாமிகா, தெலுங்கில், சிரஞ்சீவி ஜோடியாக ஆச்சாரியா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்தியில் நடித்துள்ள மும்பை சாகா முடிந்துவிட்டது.

காதலரை கைபிடித்ததும்

காதலரை கைபிடித்ததும்

தொழிலதிபர் கவுதம் கிட்சிலுவை காதலித்து வந்த காஜல் அகர்வால், கடந்த மாதம் 30 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். காதலரை கைபிடித்ததும் புது வீட்டுக்கு கிரகபிரவேசம் நடத்தினார் காஜல். மகிழ்ச்சியில் தனது திருமணம் மற்றும் அது தொடர்பான புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு வந்தார்.

இன்ஸ்டா ஸ்டோரி

இன்ஸ்டா ஸ்டோரி

பின்னர் தாங்கள் எப்படி காதலிக்கத் தொடங்கினோம் என்று தெரிவித்திருந்தார். அந்த பேட்டி வைரலானது. கொரோனா பரவல் இருப்பதால், இப்போது அவர்கள் இப்போது ஹனிமூனுக்கு செல்லமாட்டார்கள் என்று கூறப்பட்டது. ஆனால், இன்ஸ்டா ஸ்டோரியில் பாஸ்போர்ட் மற்றும் பவுச் புகைப்படங்களை பதிவிட்டு, ரெடி டு கோ என்று சில நாட்களுக்கு முன் குறிப்பிட்டு இருந்தார்.

காஸ்ட்லி ஹனிமூன்

காஸ்ட்லி ஹனிமூன்

எந்த நாட்டுக்குச் செல்கின்றனர் என்பது குறிப்பிடவில்லை. பின்னர் அவர்கள் மாலத்தீவுக்குச் சென்றிருப்பது தெரியவந்தது. கொஞ்சம் காஸ்ட்லி ஹனிமூன் டூர் இது என்று கூறப்பட்டது. அங்கிருந்து தினமும் புகைப்படங்களை வெளியிட்டு வந்த காஜல் அகர்வால், கடலுக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள அறையில் தங்கி இருப்பதாக தெரியவந்தது. .

ஆடம்பரமான பேக்கேஜ்

ஆடம்பரமான பேக்கேஜ்

இந்நிலையில் நடிகை காஜல், தனது ஹனிமூனுக்கு எவ்வளவு செலவு செய்துள்ளார் என்ற தகவல் இப்போது பரவி வருகிறது. இருவரும் ஆடம்பரமான ஹனிமூன் டூர் பேக்கஜ்ஜில் சென்றுள்ளனர். இந்த நான்கு நாள் டிரிப்பில், அவர்கள் காஸ்ட்லியான ரிசாட்டில் தங்கியுள்ளனர்.

இவ்வளவு செலவா?

இவ்வளவு செலவா?

மொத்தமாக அவர்கள் இந்த ஹனிமூனுக்கு ரூ.40 லட்சத்தை செலவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. ஹனிமுனுக்கு இவ்வளவு செலவா என்று கேட்டு வருகின்றனர். கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகைக்கு இது ஒரு பிரச்னையா என்றும் சிலர் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X