எல்லாம் பிக்பாஸுக்காகத் தானாம்.. விரைவில் 4வது டீசரும் வரப்போகுதாம்.. மாஸ் லுக்கில் கமல்ஹாசன்!
சென்னை: உலக நாயகன் கமல்ஹாசனின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வைரலாகி வருகிறது. மேலும், இது பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான லுக் என்றும் தகவல்கள் பரவி வருகின்றன.
Recommended Video
பாலிவுட்டில் சல்மான் கானும், டோலிவுட்டில் நாகர்ஜுனாவும் ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக ரெடியாகி டீசரே வெளியிட்டு விட்டனர்.
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியை 4வது முறையாக கமல்ஹாசன் தொகுத்து வழங்க ரெடி ஆகிட்டார் என்ற தகவல் தற்போது வைரலாகி வருகிறது.

சின்னத்திரையில்
வெள்ளித்திரையில் ஏகப்பட்ட சாதனைகளை செய்து அசத்தி வந்த உலகநாயகன் கமல்ஹாசன் சின்னத்திரையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க களமிறங்கிய போது, பலரும் ஆர்வத்துடன் அதனை எதிர்நோக்கினர். அதன் விளைவாக அந்த ஷோ மற்ற மொழிகளில் ஹிட் அடித்தது போலவே தமிழிலும் ஏகப்பட்ட வரவேற்பை பெற்று மாஸ் வெற்றியை அடைந்தது.

மூன்று சீசன்களாக
பிக்பாஸ் முதல் சீசன் அடைந்த வெற்றியை தொடர்ந்து, பிக்பாஸ் 2 மற்றும் 3 என கமல்ஹாசன் தொகுத்து வழங்க, புதிய புதிய போட்டியாளர்களுடன், சர்ச்சையும் கச்சேரியுமாக களைகட்டி வருகிறது பிக்பாஸ் நிகழ்ச்சி. கொரோனா காரணமாக இந்நேரம் ஆரம்பித்து இருக்க வேண்டிய பிக்பாஸ் நிகழ்ச்சி சற்று தாமதமாகி உள்ளது.

4வது சீசனுக்காக
இந்நிலையில், தற்போது சமூக வலைதளங்களில் கமல்ஹாசனின் புதிய சால்ட் அண்ட் பெப்பர் லுக் போட்டோஷூட் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அதனை பார்த்த நெட்டிசன்கள், ஆஹா.. 4வது சீசனுக்காக ஆண்டவர் ரெடியாகிட்டாரு போல என கமெண்ட் செய்து பிக்பாஸ் 4வது சீசனை எதிர் நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர்.

மற்ற மொழிகளில்
இந்தியில் சல்மான் கான் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 14வது சீசனின் டீசரும், தெலுங்கில் 2வது ஆண்டாக நாகர்ஜுனா தொகுத்து வழங்கும் தெலுங்கு பிக்பாஸ் சீசன் 4ன் அட்டகாசமான டீசரும் சமீபத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. இந்நிலையில், விரைவில் தமிழ் டீசரும் வெளியாகும், அதற்கான போட்டோஷூட்டில் தான் சமீபத்தில் கமல் கலந்து கொண்டுள்ளார் என்ற தகவல்களும் தீயாய் பரவி வருகின்றன.

எப்போ ஆரம்பிக்கும்
செப்டம்பர் மாதம் இறுதியில் பிக்பாஸ் 4வது சீசன் தொடங்கும் என்றும் பலர் கணித்துள்ளனர். அதற்கான பாதுகாப்பு பணிகள், போட்டியை எப்படி நடத்துவது. போட்டியாளர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் என பலருக்கும் கொரோனா பரிசோதனை, பொது மக்களுடன் கமல்ஹாசன் வார இறுதியில் பேசுவதை எப்படி நடத்தலாம் உள்ளிட்ட ஆலோசனைகள் நடைபெற்று வருகிறதாம்.

சர்ச்சை இருக்குமா
பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே சர்ச்சைக்கு பஞ்சம் இருக்காது. அதுதான் அதன் வெற்றியும் கூட, கடந்த சீசன் போட்டியாளர்களான வனிதா விஜயகுமார், மீரா மிதுன் எல்லாம், இன்னமும் பிக்பாஸ் நிகழ்ச்சியை ஆன்லைனில் நடத்தி வருகின்றனர். 4வது சீசனில் கலந்து கொள்ளப் போகும் பிரபலங்கள் என சிலரது பெயர்கள் வழக்கம் போல அடிபட்டு வருகின்றன.

யார் யார்?
இந்த லாக்டவுனில் கவர்ச்சி புகைப்படங்களை களமிறக்கி ரசிகர்களை கிறங்கடித்து வரும் நம்ம ஜெமினி கிரண், இடுப்பழகி ரம்யா பாண்டியன், அதுல்யா ரவி, வித்யூலேக்கா ராமன், புகழ் மற்றும் சூர்யா தேவி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சுனைனா பெயர் முன்னதாக அடிபட்ட நிலையில், அதனை அவர் உடனடியாக மறுத்துவிட்டார்.

அப்போ இந்தியன் 2?
இந்தியன் 2, தலைவன் இருக்கின்றான், அரசியல் என பிசியாக இருக்கும் நடிகர் கமல்ஹாசன் இந்த சீசனை தொகுத்து வழங்க மாட்டார் என்றும் அவருக்கு பதிலாக அவரது மகள் ஸ்ருதி ஹாசன் தொகுத்து வழங்குவார் என்ற பேச்சுக்களும் சமீபத்தில் அடிபட்டன. கமல்ஹாசன் இதில் என்ன முடிவு எடுப்பார் என்பது விரைவில் தெரிந்துவிடும்.


Click it and Unblock the Notifications











