வைரலாக்கும் ரசிகர்கள்... இதுதான் ரஜினியின் அடுத்தப் பட டைட்டிலா?
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் இப்போது நடித்துவரும் படத்தின் டைட்டில் இதுதான் என்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ரஜினிகாந்த், நயன்தாரா நடித்துள்ள தர்பார் படம், கடந்த 9 ஆம் தேதி வெளியானது. இதில் நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி, யோகிபாபு உட்பட பலர் நடித்திருந்தனர்.
லைகா தயாரித்த இந்தப் படத்தை அடுத்து, சிறுத்தை சிவா இயக்கத்தில், தனது 168-வது படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.

சன் பிக்சர்ஸ்
இதில், நடிகர் ரஜினியுடன் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், ஶ்ரீமன் உட்பட பலர் நடிக்கின்றனர். ரஜினியின் எந்திரன், பேட்ட படங்களைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இதற்கு டி.இமான் இசையமைக்கிறார். விவேகா பாடல்கள் எழுதுகிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் நடந்தது.

கே.வி.ஆனந்த்
அடுத்தக் கட்டப்படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. இந்நிலையில் ரஜினியின் அடுத்த படம் பற்றிய தகவலும் வெளியானது. அந்தப் படத்தை கே.வி.ஆனந்த் இயக்க இருப்பதாகவும் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க இருப்பதாகவும் செய்திகள் கடந்த சில நாட்களுக்கு முன் செய்திகள் வெளியாயின. ஆனால், இதை இயக்குனர் கே.வி.ஆனந்த் மறுத்தார்.

தலைப்பு
கலைப்புலி எஸ்.தாணுவும் மறுத்திருந்தார். இந்நிலையில் ரஜினிகாந்த்தின் 168-வது பட டைட்டில் என்று சமூக வலைத்தளங்களில் நேற்று முதல் ஒரு தலைப்பு வைரலாகி வருகிறது. மன்னவன் என்ற அந்த டைட்டிலைத்தான் படத்துக்கு வைத்துள்ளதாக ரசிகர்கள் தெரித்து வருகின்றனர். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர்கள் கூறிவருகின்றனர்.

ரசிகர்கள் நம்பிக்கை
ஏற்கனவே, ரஜினிகாந்த் மன்னன் என்ற படத்தில் நடித்திருந்தார். விஜயசாந்தி, விசு, கவுண்டமணி, மனோரமா உட்பட பலர் நடித்திருந்தார். இந்த படம் சூப்பர் ஹிட்டானது. இப்போது மன்னவன் படத்தில் நடிக்கிறார். இதுவும் சூப்பர் ஹிட் ஆகும் என்று ரசிகர்கள் நம்பிக்கைத் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











