twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    என்னப்பா ஏகே 62 படத்தின் மொத்த கதையையும் சொல்லிட்டிங்க...அஜித்தின் ரோல் இதுதானா?

    |

    சென்னை : ஏகே 62 படத்தின் கதை மற்றும் படத்தில் அஜித்தின் ரோல் பற்றிய அசத்தல் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் செம கொண்டாட்டத்தில் இருக்கின்றனர். படத்தை எப்போது ஆரம்பிக்க போகிறார்கள் என காத்துக் கொண்டிருக்கின்றனர்.

    அஜித் தற்போது ஹெச்.வினோத் இயக்கும் ஏகே 61 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷுட்டிங் ஒரு மாதமாக ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. அஜித் வழக்கமாக ஒரு படத்தை முடித்த பிறகு தான் அடுத்த படத்தில் கமிட் ஆவார். சினிமாவிற்கு வந்தது முதல் கைபிடித்து வரும் இந்த பழக்கத்தை அஜித் சமீபத்தில் மாற்றிக் கொண்டுள்ளார்.

    ஏகே 61 படத்தின் ஷுட்டிங் முடிவடைவதற்கு முன்பாகவே அஜித்தின் அடுத்த படமான ஏகே 62 படம் பற்றிய அறிவிப்பு வெளியாகி விட்டது. ஏகே 62 படத்தை லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்க உள்ளதாகவும், விக்னேஷ் சிவன் இந்த படத்தை இயக்க உள்ளதாகவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.

    பிளாக்பஸ்டர் டான்.. பிரம்மாண்ட கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு.. சிவகார்த்திகேயன் செம ஹேப்பி!பிளாக்பஸ்டர் டான்.. பிரம்மாண்ட கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு.. சிவகார்த்திகேயன் செம ஹேப்பி!

    ஏகே 61 தீபாவளி ரிலீசா

    ஏகே 61 தீபாவளி ரிலீசா

    கடந்த 35 நாட்களாக நடத்தப்பட்டு வந்த ஏகே 61 படத்தின் ஷுட்டிங் முடிவடைந்து விட்டது. படத்தின் ஷுட்டிங்கை ஜுலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் முடித்து, தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் ஏகே 62 படத்தின் கதை மற்றும் அஜித்தின் ரோல் பற்றிய மொத்த தகவலும் வெளியாகி உள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் ஆச்சரியப்பட்டாலும், சந்தோஷமாக கொண்டாடி வருகின்றனர்.

    இது தான் ஏகே 62 கதையா

    இது தான் ஏகே 62 கதையா

    லேட்டஸ்ட் தகவலின் படி, ஏகே 62 படத்தில் அஜித், திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த விவசாயி ரோலில் நடிக்கிறாராம். பெரிய பணக்கார குடும்பத்தை சேர்ந்த அஜித், நல்ல மனம் கொண்டவராக இருக்கிறார். அவர் ஊரில் உள்ள அனைவருக்கும் தரமான உணவு வழங்க வேண்டும் என முடிவு செய்து உணவு விநியோக பிசினஸ் ஒன்றை துவங்குகிறார். இந்த பிசினஸ் பெரிய அளவில் வெற்றி பெற்றதால், தமிழகம் முழுவதும் பல கிளைகளை துவக்கி, வெற்றிகரமாக பிசினஸ் நடத்தி வருகிறார்.

    மொத்த கதையையும் சொல்லிட்டாங்க

    மொத்த கதையையும் சொல்லிட்டாங்க

    ஆனால் அஜித்தின் வளர்ச்சியை பிடிக்காத வில்லன்கள், சதி செய்து ஒரே இரவில் அஜித்தின் பிசினஸ் முழுவதையும் இழுத்து மூட வைக்கிறார்கள். பெரிய பணக்காரராக இருந்த அஜித், ஒருவேளை சாப்பாட்டிற்கே வழியில்லாத நிலைக்கு வந்து விடுகிறார். வில்லன்களின் சதிகளை முறியடித்து, எப்படி அவர் தனது பிசினசை மீட்டெடுக்கிறார், பழைய நிலைக்கு வருகிறார் என்பது தான் படத்தின் கதையாம்.

    Recommended Video

    தல அஜித் கூட படம் பண்ணனும் | தமிழ் Youngest Director| Sona Sokkama- First Single
    நிஜமாவே விக்கி தயாரித்த கதை இதுவா

    நிஜமாவே விக்கி தயாரித்த கதை இதுவா

    விமர்சனம் சொல்வதை போல் படத்தின் ஒட்டுமொத்த கதையும் வெளியாகி விட்டதால் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். படத்தின் கதை, படத்தில் நடிப்பவர்கள் என அனைத்தையும் அனைவரும் ரகசியமாக வைத்து வரும் சமயத்தில், அஜித் நடிக்க போகும் படத்தின் கதை முழுவதையும் எப்படி வெளியே விட்டார்கள் என ஆச்சரியம் தெரிவித்து வருகின்றனர். நிஜமாகவே விக்னேஷ் சிவன் இந்த கதையை தான் தயார் செய்திருக்கிறாரா அல்லது இந்த கதையும் கற்பனையானதா என பலரும் கேட்டு வருகின்றனர்.

    English summary
    According to sources, In AK 62 Ajith to play farmer role who was the son of rich landlord. Ajith try to feed quality food for entire village and starts a food business. It becomes grand success and expand the business all over Tamilnadu. But top Tycoons evil plans and shut down. How Ajith will over come from this situation was the story of AK 62.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X