வாடிவாசல் காளை ரெடியாகுது போல.. வெற்றிமாறன் படத்துக்காக நியூ கெட்டப்புக்கு மாறிய சூர்யா!

சென்னை: சூர்யாவின் நியூ லுக் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' படத்தில் நடிக்கவுள்ள சூர்யாவின் புது லுக் இதுதான் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சூரரைப் போற்று படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கும் சூர்யா, அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

இந்த மாதம் இறுதியில்

இந்த மாதம் இறுதியில்

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில், நடிகர் சூர்யா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் உருவாகி உள்ள சூரரைப் போற்று திரைப்படம் வரும் அக்டோபர் 30ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது. தொடர் தோல்விக்கு பிறகு நிச்சயம் இந்த படம் சூர்யாவுக்கு ஒரு பிளாக்பஸ்டர் ஹிட் கொடுக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

வாடிவாசல் காளை

வாடிவாசல் காளை

ஜல்லிக்கட்டு போட்டியை மையப்படுத்தி பிரபல எழுத்தாளர் சி.எஸ். செல்லப்பா எழுதிய வாடிவாசல் நாவலை அதே டைட்டிலில் படமாக இயக்க முடிவு செய்துள்ளார் வெற்றிமாறன். தனுஷை வைத்து ஏகப்பட்ட படங்களை இயக்கிய வெற்றிமாறன், சூர்யாவுடன் முதல் முறையாக வாடிவாசல் படத்தில் இணைய உள்ளார்.

நீண்ட முடியுடன்

நீண்ட முடியுடன்

பொன்னியின் செல்வன் படத்திற்காக நடிகர் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் எல்லாம் நீண்ட முடியை வளர்த்த நிலையில், வாடிவாசல் படத்துக்காக நடிகர் சூர்யா நீண்ட முடியை வளர்த்து வருகிறார். தற்போது கசிந்துள்ள இந்த நியூ லுக் போட்டோவை பார்த்த சூர்யா ரசிகர்கள் அதனை வைரலாக ஷேர் செய்து கொண்டாடி வருகின்றனர்.

டபுள் ரோல்

டபுள் ரோல்

கண்டிப்பா வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் நடிகர் சூர்யாவுக்கு டபுள் ரோல் இருக்கும் என சூர்யாவின் 45வது பிறந்தநாளை முன்னிட்டு வெளியான வாடிவாசல் ஃபர்ஸ்ட் லுக்குடன் இந்த லுக்கை கம்பேர் செய்து ரசிகர்கள் தங்களின் எதிர்பார்ப்புகளை எகிற வைத்து வருகின்றனர். இனிமே வர எல்லா படங்களும் சூர்யாவுக்கு பிளாக்பஸ்டர் தான் எனவும் டிரெண்ட் செய்கின்றனர்.

தியேட்டரில் ரிலீஸ் ஆகுமா

தியேட்டரில் ரிலீஸ் ஆகுமா

சமீபத்தில் ஒடிடியில் வெளியான க/பெ. ரணசிங்கம் திரைப்படம் வெளிநாடுகளில் தியேட்டர்கள் திறந்த நிலையில், தியேட்டர்களிலும் வெளியானது. அக்டோபர் 16 முதல் தியேட்டர்கள் திறக்கப்பட்டு வரும் நிலையில், சூரரைப் போற்று திரைப்படம் இந்தியாவில் அமேசான் பிரைமில் வெளியாகும் அதே நாளில் தியேட்டரிலும் வெளியாகுமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X