twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பொன்னியின் செல்வன் ஆடியோ ரிலீஸ் தேதி, இடம் இதுவா?...ஆவலாக காத்திருக்கும் ரசிகர்கள்

    |

    சென்னை : இந்த ஆண்டு அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களின் வரிசையில் அடுத்து வெயிட்டிங்கில் இருக்கும் படம் பொன்னியின் செல்வன். டைரக்டர் மணிரத்னம் இயக்கி உள்ள இந்த படம் இந்திய சினிமாவே எதிர்பார்க்கும் படமாக உள்ளது.

    பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் 30 ம் தேதி உலகம் முழுவதும் 5 மொழிகளில் மிக பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தின் வேலைகளும் ஏறக்குறைய முடிந்து விட்டதாக சொல்லப்படுகிறது.

    இதனால் முதல் பாகத்தின் மீதான ஆர்வத்துடன் சேர்த்து இரண்டாம் பாகத்தின் மீதான ஆர்வமும் பல மடங்காக அதிகரித்துள்ளது. ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டும் விதமாக முதலில் போஸ்டர்களை வெளியிட்டு வந்த படக்குழுவினர் தற்போது வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

    பாலிவுட்டில் விஸ்வரூபமெடுக்கும் பாய்காட்: 'லைகர்’ படத்தின் நாயகி அனன்யா பாண்டேவின் கருத்து இதுதான்! பாலிவுட்டில் விஸ்வரூபமெடுக்கும் பாய்காட்: 'லைகர்’ படத்தின் நாயகி அனன்யா பாண்டேவின் கருத்து இதுதான்!

    ரசிகர்களை கவர்ந்த பொன்னி நதி

    ரசிகர்களை கவர்ந்த பொன்னி நதி

    பொன்னியின் செல்வன் டீசரை தொடர்ந்து, நடிகர் விக்ரம் 5 மொழிகளில் டப்பிங் பேசிய மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து சமீபத்தில் பொன்னியின் செல்வன் ஃபர்ஸ்ட் சிங்கிளாக பொன்னி நதி பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடல் 12 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்று அனைத்து மொழி ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.

    தமிழுக்கு மட்டும் ஸ்பெஷல்

    தமிழுக்கு மட்டும் ஸ்பெஷல்

    பொன்னி நதி பாடல் படத்தின் இன்ட்ரோ சாங்காகவும், வந்தியத் தேவனின் இன்ட்ரோ சாங்காகவும் இருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இளங்கோ கிருஷ்ணன் எழுதிய இந்த பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசையமைத்து, பாடி உள்ளார். நாட்டுப்புற ஸ்டைலில் அமைக்கப்பட்டுள்ள இந்த பாடல் அனைத்து மொழியினரும் ரசிக்கும் வகையில் ஒரே மாதிரியான இசையில் அமைக்கப்பட்டுள்ளது.தமிழில் இன்னும் ஸ்பெஷலாக தமிழில் அதிகம் புழக்கத்தில் இல்லாத வார்த்தைகளைக் கொண்டு இந்த பாடல் அமைக்கப்பட்டுள்ளது.

    அடுத்த பாடல் எப்போ

    அடுத்த பாடல் எப்போ

    படத்தின் அடுத்த பாடல் என்ன, எப்போ வெளியிடுவார்கள் என ரசிகர்கள் கேட்டு வரும் நிலையில் செகண்ட் சிங்கிள் ஆகஸ்ட் மாத இறுதியில் வெளியிடப்பட உள்ளதாகவும், இது ஆதித்ய கரிகால சோழன் ரோலில் நடித்துள்ள விக்ரமிற்கான சாங்காக இருக்கும் என கடந்த சில நாட்களாக தகவல் பரவி வருகிறது.

    எல்லாமே ஒரினிஜல் தங்கமா?

    எல்லாமே ஒரினிஜல் தங்கமா?

    பொன்னியின் செல்வன் செகண்ட் சிங்கிள், ஆடியோ ரிலீஸ் பற்றி அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில் யாரும் கொஞ்சமும் எதிர்பார்க்காத வகையில், படத்தில் ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, கார்த்தி உள்ளிட்டோர் பயன்படுத்திய நகைகள் பற்றிய ஒரு வீடியோவை படக்குழு வெளியிட்டது. மின்னுவதெல்லாம் பொன்...எங்களின் நகை ஸ்பான்சர் Kishan Dasand Co என்ற கேப்ஷனுடன் படக்குழு பிடிஎஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டது.

    ஆடியோ மட்டுமில்ல டிரைலரும் வருது

    ஆடியோ மட்டுமில்ல டிரைலரும் வருது

    லேட்டஸ்ட் தகவலின் படி பொன்னியின் செல்வன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவை செப்டம்பர் 6 ம் தேதி, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ள இந்த விழாவில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த அத்தனை நடிகர், நடிகைகளும் கலந்து கொள்ள உள்ளதாக சொல்லப்படுகிறது.

    ஆஹா...செம தகவலா இருக்கே

    ஆஹா...செம தகவலா இருக்கே

    கோலிவுட்டில் இதுவரை நடக்காத அளவிற்கு மிக பிரம்மாண்டமாக பொன்னியின் செல்வன் ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும், இந்த விழாவிற்காக அழைக்கப்பட விஐபி.,க்கள் லிஸ்ட் தயாராகி வருவதாகவும் சொல்லப்படுகிறது. விரைவில் இந்த விழா பற்றிய அறிவிப்பை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    As per the latest reports, the lavish audio & trailer launch of 'Ponniyin Selvan' is set to take place on September 6 at Nehru Indoor Stadium in Chennai. The team conducted a grand teaser launch and the first single launch events earlier.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X