யுவன் முஸ்லீமாக மாறியதன் பின்னணி இதானா?
சென்னை: யுவன் இஸ்லாம் மதத்தைத் தழுவிய சம்பபவம் திரையுலகில் மட்டுமல்ல.. அரசியலிலும் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
இவரது மதமாற்றத்தின் பின்னணியில் நிறைய பெரும்புள்ளிகள் இருப்பதாக தகவல்கள் கிளம்பியுள்ளன.

அமீர் காரணமா?
யுவனுக்கு மிக நெருக்கமான இயக்குநர்களில் ஒருவர் அமீர். அவர்தான் 'இறைவன் புரத்திலிருந்து சாந்தியும் சமாதானமும் உங்களுக்குக் கிடைக்கும்' என்று கூறி யுவன் மதம் மாற காரணமாக இருந்தார் என்று சிலர் கூறினர். இதை யுவனிடம் நேரடியாகக் கேட்ட போது, அவர் மறுத்தார். யாரும் என்னை கட்டாயப்படுத்தவில்லை. என்னுடைய ஆன்மீகத் தேடலுக்கு விடைதான் இஸ்லாம் என்று கூறியிருந்தார்.

புதுக் கதை
இந்த நிலையில் தமிழகக் காவல் துறையின் ஐபிஎஸ் அதிகாரி ஜாஃபர் சேட்டின் மகள் ஜெனிபர் சேட்டை மணப்பதற்காகத்தான் யுவன் முஸ்லிமாக மாறினார் என்றும் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

சர்ச்சையில் ஜெனிபர்
இந்த ஜெனிபர் குறித்தும் பல்வேறு சர்ச்சைக்குரிய செய்திகள் கிளம்பியுள்ளன. வீட்டு வசதி வாரியத்தில் இவருக்கு முறைகேடாக நிலம் ஒதுக்கப்பட்டதாக ஒரு குற்றச்சாட்டும் உள்ளது.

முஸ்லிம் இளவரசி..
இவை போதாதென்று.. கூடுதலாக ஒரு செய்தி. ஒரு பணக்கார முஸ்லிம் பெண்ணை யுவன் மணக்கப் போகிறார். அதற்காகத்தான் இந்த மதமாற்றம் என்று.

நிம்மதி மட்டுமே என் சாய்ஸ்...
ஆனால் இவற்றையெல்லாம் மிகவும் அமைதியாக வேடிக்கைப் பார்க்கிறார் யுவன். "என் மதமாற்றத்துக்கு வெளிக் காரணங்கள் எதுவும் இல்லை. எனக்குள் நிகழ்ந்த மாறுதல்கள்தான். நிம்மதியும் அமைதியும் கிடைக்கும் மார்க்கமாக இதை நான் பார்க்கிறேன். எனவேதான் இஸ்லாத்தைத் தேர்ந்தெடுத்தேன்," என்கிறார் யுவன்.


Click it and Unblock the Notifications











