twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அண்ணாச்சியின் ‘தி லெஜண்ட்’ படத்தின் கதை இது தானா?..டெரர் பாத்திரத்தில் வருகிறார் போல

    |

    சென்னை : லெஜண்ட் சரவணன் ஹீரோவாக அறிமுகமாகும் தி லெஜண்ட் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மே 29 ம் தேதி மிக பிரம்மாண்டமாக நடத்தப்பட உள்ளதாக கூறப்படும் நிலையில் படத்தின் கதை பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி உள்ளன.

    தி லெஜண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் முதன் முறையாக மிகுந்த பொருட்செலவில் மிக பிரமாண்டமான முறையில் பான் இந்தியா படம் ஒன்றை தயாரித்து வருகின்றனர். 'தி லெஜன்ட்' என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தின் கதாநாயகனாக லெஜண்ட் சரவணன் நடிக்கிறார். கதை திரைக்கதையை எழுதி இயக்குகிறார்கள் ஜேடி-ஜெர்ரி. இளமை ததும்பும் இசையை ஹாரிஸ் ஜெயராஜ் வழங்கியுள்ளார்.

    மிரட்டலான கதையுடன் டிமாண்டி காலனி 2வுக்கு தயாராகும் அஜய் ஞானமுத்து... விரைவில் அறிவிப்பு! மிரட்டலான கதையுடன் டிமாண்டி காலனி 2வுக்கு தயாராகும் அஜய் ஞானமுத்து... விரைவில் அறிவிப்பு!

    ஹிட் அடித்த பாடல்கள்

    ஹிட் அடித்த பாடல்கள்

    இப்படத்தின் முதல் லிரிக்கல் பாடல் 'மொசலோ மொசலு'-வை பிரபல இயக்குநர்கள் மணிரத்னம், ராஜமெளலி மற்றும் சுகுமார் வெளியிட்ட நிலையில், ஒரு கோடிக்கும் அதிகமான பார்வைகள் மற்றும் பாராட்டுகளை பாடல் கடந்து ஹிட் அடித்துள்ளது. பா.விஜய் பாடல் வரிகளை இயற்ற, அர்மான் மாலிக் பாடி இருந்தார். ராஜு சுந்தரம் நடனம் அமைத்துள்ள இந்த பாடலில் பிக் பாஸ் பிரபலம் யாஷிகா ஆனந்த் ஆடி இருந்தார்.

    ஒரே மேடையில் 10 நடிகைகள்

    ஒரே மேடையில் 10 நடிகைகள்

    அதைத் தொடர்ந்து, இப்படத்தின் இரண்டாம் பாடலான பென்னி தயாள் மற்றும் ஜொனிதா காந்தி பாடி கவிஞர் சினேகன் எழுதிய 'வாடி வாசல்' சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் ராய் லட்சுமி நடனம் ஆடி இருந்தார். இந்நிலையில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மே 29 ம் தேதி மாலை 6 மணிக்கு நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இதில் பூஜா ஹெக்டே, தமன்னா, ஹன்சிகா, நுபுர் சனோன, ஷ்ரத்தா ஶ்ரீநாத், ஶ்ரீ லீலா, டிம்பிள் ஹயாதி, ராய் லட்சுமி, ஊர்வசி ரவுத்தலா உள்ளிட்ட 10 முன்னணி நடிகைகள் பங்கேற்க உள்ளனர்.

    இது தான் படத்தின் கதையா

    இது தான் படத்தின் கதையா

    எமோஷன், ஆக்ஷன், காதல், காமெடி என அனைத்தும் ஒருங்கிணைந்த ஒரு பக்கா கமர்சியல் மாஸ் படமாக 'தி லெஜண்ட்' உருவாக்கப்பட்டுள்ளதாம். லேட்டஸ்டாக வெளியாகி உள்ள தகவலின்படி, ஒரு அன்பான எளிய மனிதன், தனது புத்திசாலித்தனத்தாலும், முயற்சியாலும், வலிமையாலும் அனைத்து எதிர்ப்புகளையும் தாண்டி 'ஒரு லெஜண்டாக' எப்படி உருவாகிறான் என்ற கருத்தை மையமாக வைத்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில், அனைவரின் மனதிலும் ஒரு மிக பெரிய பாசிட்டிவ் எண்ணத்தை உணரும் வகையில் திரைக்கதையும் வசனமும் எழுதப்பட்டிருக்கிறதாம்.

    விவேக் நடித்த கடைசி படம்

    விவேக் நடித்த கடைசி படம்

    சென்னையில் பிரமாண்டமான அரங்கங்கள் அமைத்து துவங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு கும்பகோணம், பொள்ளாச்சி, இமயமலை உள்ளிட்ட இடங்களை தொடர்ந்து முக்கிய காட்சிகள் மற்றும் பாடல்கள் உக்ரைனில் படமாக்கப்பட்டுள்ளன. இந்த படத்தில் மறைந்த காமெடி நடிகர் விவேக், யோகிபாபு, பிரபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இது தான் விவேக் நடித்த கடைசி படம். இதில் நடித்துக் கொண்டிருக்கும் போதே விவேக் உயிரிழந்தார். ஆனால் அவரின் ரோல் படம் முழுக்க வருவதால், ஏற்கனவே அவர் நடித்த காட்சிகளை வீணாக்கமல், மீதி அவர் நடிக்க வேண்டிய காட்சிகளில் தொழில்நுட்ப முறையில் அவர் நடித்ததை போன்று உருவாக்கி படத்தை முடித்துள்ளனர்.

    விவேக் காட்சிகளில் சஸ்பென்ஸ்

    விவேக் காட்சிகளில் சஸ்பென்ஸ்

    இதுவரை வெளியிடப்பட்ட படத்தின் டீசர், ஃபர்ஸ்ட் மற்றும் செகண்ட் சிங்கிள் ஆகியவற்றில் விவேக் மற்றும் யோகிபாபு நடித்த காட்சிகள் இடம்பெறவில்லை. அதனால் மே 29 ம் தேதி நடக்கும் விழாவில் வெளியிடப்பட உள்ள டிரைலரில் விவேக் நடித்த காட்சிகள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    According to sources, common man who used his knowledge, effort, strength and becomes a Legend is the story of The Legend movie. This movie will become attract from children to adult with positive story and dialogues. Late actor Vivek and Yogibabu's characters kept under secret. It may shown in trailer of the movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X