அசிங்கமான பேச்சு… சர்ச்சையில் சிக்கிய பயில்வான் ரங்கநாதன்… இதுதான் காரணமா?

சென்னை : தமிழ் சினிமாவில் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பயில்வான் ரங்கநாதன். இவர் திரைப்படங்களில் நடித்து பிரபலமானதை விட நடிகர், நடிகைகளை விமர்சனம் செய்துதான் மிகவும் பிரபலமானார்.

நடிகை, நடிகர்களின் அந்தரங்க விஷயங்களை அருகில் இருந்து பார்த்தது போல தனது யூடியூப் சேனலில் பேசி வருகிறார். இதனால்,பல நடிகர், நடிகைகள் இவரை படுமோசமாக விமர்சித்தும் தொடர்ந்து அப்படியே பேசி வருகிறார்.

பயில்வான் ரங்கநாதன், தற்போது சர்ச்சையில் சிக்கி உள்ளதற்கு முக்கிய காரணம் இதுதான் என்று சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

பயில்வான் ரங்கநாதன்

பயில்வான் ரங்கநாதன்

நடிகரும், சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் கிட்டதட்ட 10க்கும் மேற்பட்ட யூடியூப் சேனல்களில் பேசி வருகிறார். நடிகைகளுக்கு சினிமாவில் எப்படி வாய்ப்பு கிடைத்தது, நடிகைகள் எப்படி பிரபலமானார்கள், சினிமா பிரபலங்களின் விவாகரத்து என சலக விஷயத்திலும் மூக்கை நுழைத்து, அவங்கள் குறித்து அசிங்கமாக பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

தொடர்ந்து அவதூறு பேச்சு

தொடர்ந்து அவதூறு பேச்சு

பயில்வான் ரங்கநாதன் மீது பாடகி சின்மயி, நடிகை கஸ்தூரி உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் சமூக வலைதளங்களில் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்கள். ஒரு முறை நடிகை ராதிகா குறித்து இவர் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்து இருந்தார். பீச்சில் வாக்கிங் போகும் போது பயில்வானை சந்தித்த ராதிகா அவரை அந்த இடத்திலேயே வைத்து லெஃப் அண்ட் ரைட்டு வாங்கி உள்ளார்.

காவல் நிலையத்தில் புகார்

காவல் நிலையத்தில் புகார்

நடிகர் பயில்வான் ரங்கநாதன் சினிமா பிரபலங்கள், பெண்கள் குறித்தும் அவதூறான கருத்துகளை இணையத்தில் பரப்பி வருவதால், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி திவ்யா என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அவதூறு செய்திகளை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வரும் பயில்வான் ரங்கநாதனை கைது செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.

இதுதான் காரணம்

இதுதான் காரணம்

இந்நிலையில்,பயில்வான் ரங்கநாதன், சர்ச்சையில் சிக்க முக்கிய காரணம் இதுதான் என்று கூறப்படுகிறது. பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் மீ டு புகார் அளிக்கும் நடிகைகள் குறித்து கொச்சையாக பேசி இருந்தார். இந்த வீடியோவை வன்னியரசு ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, பெண்களை ஆபாசமாக இழிவுபடுத்தும் இவனை குண்டர் சட்டத்தில் தளைப்படுத்தவேண்டும் என்று பதிவிட்டுஇருந்தார். அதே போல பல நடிகர், நடிகைகளும் தொடர்ந்து பயில்வான் ரங்கநாதன் மீது மறைமுகமாக புகார் அளித்து வந்துள்ளனர். இதுதான் இவர் சர்ச்சையில் சிக்க காரணம் என கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X