Nayanthara: இதுக்குத்தான் நயன்தாரா இன்ஸ்டாகிராம் வந்தாரா.. ஷாருக்கானுக்கு மட்டும் அப்படியொரு ஸ்பெஷல்
சென்னை: நடிகை நயன்தாரா சோஷியல் மீடியாவில் அதிகம் நெகட்டிவிட்டி இருப்பதால் எந்தவொரு சமூக வலைதளத்திலும் கணக்கு தொடங்காமல் ரொம்பவே பிரைவேட் பர்சனாக இருந்து வந்தார்.
ஆனால், அவரது கணவர் விக்னேஷ் சிவனோ எந்தவொரு நெகட்டிவ் ட்ரோல்களை பற்றியெல்லாம் கொஞ்சமும் கவலைப்படாமல் எப்போதுமே சோஷியல் மீடியாவில் செம ஆக்டிவாக இருந்து வருகிறார்.

இந்நிலையில், இன்று திடீரென நடிகை நயன்தாரா இன்ஸ்டாகிராமில் புதிதாக கணக்கை தொடங்கி முதன்முறையாக தனது அழகு குட்டிச் செல்லங்களான உயிர் மற்றும் உலகத்தின் முகத்தையே காட்டிய நிலையில், அதற்கு பின்னாடி இப்படியொரு வியாபார தந்திரமும் இருப்பது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.
இன்ஸ்டாகிராமுக்கு வந்த லேடி சூப்பர்ஸ்டார்: நடிகை நயன்தாரா திடீரென இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்கி ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார். முதல் போஸ்ட்டே தனது உயிர் மற்றும் உலகத்துடன் எடுத்துக் கொண்ட வீடியோவை வெளியிட்டு அதற்கு ஜெயிலர் பாடலை எல்லாம் போட்டு அலப்பறையை கிளப்பி விட்டார் லேடி சூப்பர்ஸ்டார்.
இந்நிலையில், இன்ஸ்டாகிராமுக்கு நடிகை நயன்தாரா திடீரென என்ட்ரி கொடுக்க இப்படியொரு பின்னணி இருப்பதை அவரே வெளிப்படையாக அடுத்தடுத்த போஸ்ட்டுகளில் அறிவித்து விட்டார்.
இன்ஸ்டாகிராம் வர இதுதான் காரணம்: பட புரமோஷன்களில் கலந்து கொள்ளாமல் தவிர்த்து வரும் நடிகை நயன்தாரா சென்னையில் நேற்று நடைபெற்ற ஷாருக்கானின் ஜவான் பட புரமோஷனுக்கும் கலந்து கொள்ளவில்லை.
மும்பை மற்றும் வெளிநாடுகளில் நடைபெற உள்ள புரமோஷனுக்கும் நயன்தாரா செல்லமாட்டார் என்கிற நிலையில், சோஷியல் மீடியா மூலம் ஜவான் படத்தை புரமோட் செய்ய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணக்கு தொடங்கி உள்ளார் நயன்தாரா.
ஜவான் டிரெய்லரை வெளியிட்ட நயன்தாரா: முதல் போஸ்ட்டுக்கு பிறகு அடுத்தடுத்து ஜவான் படத்தின் டிரெய்லரை வெளியிட்டு ரசிகர்களை வரும் 7ம் தேதி மறக்காமல் ஜவான் படத்தை பார்க்கவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
நடிகர் விஜய் போல நயன்தாராவும் இனிமேல் தனது படங்களின் புரமோஷனுக்கு சோஷியல் மீடியாவை பயன்படுத்துவார் என தெரிகிறது. இப்படியொரு விஷயத்தை இவர் இதற்கு முன்பாகவே செய்திருந்தால் விஜய்யின் பிகில், ரஜினிகாந்தின் தர்பார், அண்ணாத்த உள்ளிட்ட பல படங்களுக்கு பலமாக அமைந்திருக்குமே என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











