பாலாவையும் ஷிவானியையும் பிரிச்சதே அதுக்குத்தானாம்.. இந்த வாரம் டபுள் எவிக்ஷன்? புது வரவும் இருக்கு!

சென்னை: ஷிவானி உருகி உருகி காதலித்தும், பாலா அவரை ஊறுகாய் போல உபயோகப்படுத்தியதும் தற்போது வெளிச்சமாகி உள்ளது.

Recommended Video

கொலுத்தி போட்ட பிக் பாஸ்! இந்த வாரம் வெளியேற போவது யார்?

கட்டிப் பிடித்து, நெஞ்சில் சாய்த்து பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களுக்கே தெரியும் அளவுக்கு காதல் செய்து விட்டு, இப்போ லவ் பண்ணல, என ஷிவானியை நோஸ் கட் பண்ணிவிட்டு பாலா துரத்தியடித்ததற்கு பின்னாடி இப்படி ஒரு விஷயம் இருப்பதாக பகீர் தகவல் ஒன்று பரவி வருகிறது.

மேலும், இந்த வாரம் அதிரடியாக டபுள் எவிக்‌ஷன் செய்யப்படும் என்றும் தகவல்கள் பரவி வருகின்றன.

காதல் மன்னன்

காதல் மன்னன்

பிக் பாஸ் வீட்டில் பாலாஜி முருகதாஸை ஒரு காதல் மன்னனாகவே சுற்றி வருகிறார். இப்ப எல்லாம் பெண்களுக்கு முரட்டுத்தனமான ஆட்களைத் தான் லவ் பண்ண பிடிக்கும் என்கிற பல்ஸை புரிந்து கொண்ட பிக் பாஸ் குழு, சூப்பரான பிளே பாயான பாலாஜியை இந்த சீசனில் களம் இறக்கினர்.

வழியும் பெண்கள்

வழியும் பெண்கள்

பாலாஜி முருகதாஸ் பின்னாடி பைத்தியம் பிடித்தது போல முதலில் சனம் ஷெட்டி அலையோ அலைன்னு அலைந்தார். பின்னர், அவருக்கும் இவருக்கும் முட்டிக் கொள்ள இருவரும் பிரிந்து விட்டனர். கேபியும் பாலா கூட சுத்த, அவரை தங்கச்சி எனக் கூறி அப்செட் பண்ணிட்டார். சுச்சியும் பாலா பின்னாடி ரொம்பவே வழியுறாரு, ஷிவானி பாலா கதை ஊர் அறிந்த ரகசியம்.

அதுக்குள்ள பிரேக்கப்

அதுக்குள்ள பிரேக்கப்

ஷிவானி நாராயணன், பாலா கூட நல்லா ஜெல்லாகிட்டார். இருவரும் இந்த சீசனில் லவ் பண்ணுவாங்கன்னு பார்த்தா, அதுக்குள்ள பிரேக்கப் ஆகிடுச்சு, சுசித்ராவின் என்ட்ரிக்கு பிறகு தான் ஷிவானி நாராயணன், பாலாஜி முருகதாஸ் கிட்ட இருந்து பிரிந்து சென்றார் என்று பார்த்தால், அதற்கு பின்னாடி இப்படி ஒரு கதை இருக்கு என புதிய தகவல்கள் பூதத்தை கிளப்பி வருகின்றன.

புதுசா கிளம்பிய பூதம்

புதுசா கிளம்பிய பூதம்

ஷிவானி நாராயணனின் ரீல் ஜோடியான அசீம் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டுக்குள் வரப் போகிறார் என்றும், அந்த காரணத்திற்காகத் தான் ஷிவானி நாராயணனுக்கு பாலாவுக்கும் பிக் பாஸ் கனெக்‌ஷனை பிடுங்கி விட்டுள்ளார் என்றும் நெட்டிசன்கள் புதிய பூதங்களை கிளப்பி வருகின்றனர்.

14 நாட்கள் ஆகிடுச்சு

14 நாட்கள் ஆகிடுச்சு

பகல் நிலவு நடிகர் முகமது அசீம், சொகுசு ஹோட்டலில் 14 நாட்கள் குவாரண்டைனை முடித்துள்ளார் என்றும், சீக்கிரமே பிக் பாஸ் வீட்டில் என்ட்ரி கொடுத்து, இங்கேயும் ஷிவானி கூட ரொமான்ஸ் சேப்டரை ஆரம்பிக்கப் போகிறார் என்றும் கூறி வருகின்றனர். மேலும், இன்னொரு இடியையும் நெருங்கிய வட்டாரங்கள் இறக்கி உள்ளன.

இன்னொரு இடி

இன்னொரு இடி

இது இன்னொரு இடியாக இருந்தாலும், கட்டாயம் தேவையான இடியாகத்தான் இருக்கும் என பலரும் எதிர் நோக்கி காத்திருக்கின்றனர். பிக் பாஸ் வீட்டில் ஒருத்தர் உள்ளே வருவதும், ஒருத்தர் வெளியே செல்வதுமாக இருந்தால், வீடு எப்போ தான் பாஸ் ஹவுஸ் ஃபுல் போர்டை அகற்றும் என்கிற கேள்விக்கும் விடையாக இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன் நடக்கும் என்கிற தகவல் கசிந்துள்ளது.

அனிதாவுக்கு டாட்டா

அனிதாவுக்கு டாட்டா

இந்த முறை எவிக்‌ஷன் நாமினேஷனில் அதிக ஓட்டுக்களை பெற்ற சுசித்ரா மற்றும் அனிதா ஆகிய இருவரில், அனிதா தான் வெளியேறுவார் என்பது உறுதியாகி உள்ளது. கமல் சாரையே எதிர்த்து பேச ஆரம்பித்த பிறகு, அவரை மேலும், பிக் பாஸ் வீட்டிற்குள் வைத்திருந்தால், சிக்கல் தான். சுச்சியை அவ்வளவு சீக்கிரமாக அனுப்ப மாட்டார்கள்.

பாலாவை பார்சல் பண்ண பிளான்

பாலாவை பார்சல் பண்ண பிளான்

முகமது அசீம் உள்ளே நுழையும் நிலையில், அதிரடியாக இந்த வாரம் டபுள் எவிக்‌ஷனையும் பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்துபவர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. பிக் பாஸ் ரூல்களை மதிக்காமல் விளையாடி வரும் பாலாவை இந்த வாரம் அதிரடியாக பார்சல் பண்ணி வெளியே அனுப்ப பிளான் நடக்கிறதாம்.

துரத்தி அடிங்க

துரத்தி அடிங்க

இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், பாலாவை ‘அட்ஜெஸ்ட்மென்ட்' விவகாரத்திலேயே ரெட் கார்டு கொடுத்து அனுப்பி இருந்தால், இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும். ப்ளீஸ் இப்போதாவது அவனை துரத்தி அடிங்க, என பாலாஜி ஹேட்டர்கள் கூறி வருகின்றனர். இந்த வாரம் கமல் சாருக்கு சூப்பர் வேலை காத்துக் கொண்டு இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X