ரஜினி, விஜய்யை காப்பி அடித்த அஜய் தேவ்கன்.. இந்தி மொழி சர்ச்சை பேச்சு இதற்காகத்தானா?
சென்னை : பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் இந்தி மொழியை தூக்கி பிடித்து பேசியதற்கான காரணம் தற்போது தெரிய வந்துள்ளது.
இதைகேள்வி பட்ட ரசிகர்கள் அட பாவமே இரண்டு நாளா இணையத்தில் இந்தி... இந்தினு கத்துனதுக்கு இதுதான் காரணமா? என பங்கமாக கலாய்ந்து வருகின்றனர்.
இன்னும் சிலர் இந்த வேலையை ரஜினிதான் செய்வாரு... அத கூட அப்படியே காப்பி அடிச்சீட்டீங்களே என்று கேட்டு வருகின்றனர்.

ஏகப்பட்ட பில்டப்புகள்
பொதுவாக ஒரு படம் வெளிவருகிறது என்றால் அந்த படத்திற்கு ஏகப்பட்ட பில்டப்புகள் இருக்கும். ஒரு நாள் டீசர் வெளியாகும், ஒரு நாள் டிரைலர் வரும், ஒரு நாள் பாட்டு வரும் இப்படி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை எகுறவிட்டு பின் ஒரு நாள் திரையரங்கில் படம் வெளியாகும்.

வியாபார தந்திரம்
பெரிய நடிகர்களின் படங்களுக்கு கூடுதலாக ஒரு ட்விஸ்ட் வெச்சி இருப்பாங்க அது தான் படத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு, கதையை திருடி விட்டார்கள், படத்திற்கு பிரச்சனை, சர்ச்சை என ஏதாவது ஒன்றை கிளப்பி விட்டு, ஓடாத படத்தையும் ஒடவைக்கும் ஒருயுக்தியை திரைத்துறை ஒரு வியாபார தந்திரமாக வைத்துள்ளது.

ரஜினியின் வழக்கம்
அந்த வேலையை ரஜினி நாசுக்கா செய்வாரு, படம் ரிலீசுக்கு முன் ஊடகங்களில் எதையாவது பேசி, பேசுபொருளாக மாறுவதை ரஜினி வழக்கமாக வைத்திருந்தார். அதே பாணியை விஜய்யும் பின் பற்றினார். சமீபத்தில் பீஸ்ட் படம் வெளியாகும் முன் தொலைக்காட்சியில் இயக்குநர் நெல்சனுக்கு பேட்டி அளித்தார். இதற்கு முன் ஆடியோ ரிலீஸில் ஏதாவது பேசி அது பரபரப்பாக மாறும். இம்முறை அது நடக்க வேண்டாம் என ஆடியோ ரிலீஸை ரத்து செய்தது தயாரிப்பு நிறுவனம் அதற்கு பதில் நேரலையில் பேட்டி கொடுத்தார். அதில் அளித்த பதில்கள் பேசு பொருளானது.

இதுதான் காரணம்
அஜய் தேவ்கன் இதே பாணியைத்தான் ஈ அடிச்சான் காப்பியாக செய்துள்ளார். அஜய் தேவ்கன் நடித்த Runway 34 படம் நேற்று திரையரங்கில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் அஜய் தேவ்கன், அபிதாப் பச்சன், ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடித்துள்ளார். கேஜிஎஃப் 2 படம் பட்டையை கிளப்பி வரும் நேரத்தில், Runway34 திரைப்படம் Runwayவை விட்டு ஓடிவிடுமோ என்ற பயத்தில் அஜய் தேவ்கன் இந்தி மொழி குறித்து சர்ச்சை பதிவை போட்டு பேசுபொருளாக மாறியுள்ளார். உண்மையில் அவருக்கு மொழிப்பற்றெல்லாம் இல்லை, எல்லாம் வியாபார தந்திரம் பற்றுதான். இப்போ புரிதா? இந்திக்கு கொடி பிடித்த காரணம்.


Click it and Unblock the Notifications











