அஜித்தால் மண்டையை பிச்சிக்கிறாரா மகிழ் திருமேனி.. ஏகே 62 பட அறிவிப்பு தாமதமாக இதுதான் காரணமா?
சென்னை: இதுவரை இல்லாத அளவுக்கு ஏகே 62 படத்தின் மீது ரொம்பவே அக்கறை செலுத்தி வருகிறார் நடிகர் அஜித் என சினிமா வட்டாரத்தில் பரவலான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
நயன்தாராவின் கணவர் இயக்குநர் விக்னேஷ் சிவன் வேண்டாம் என முடிவெடுக்க காரணமும் அதுதான் என்கின்றனர்.
இந்நிலையில், இயக்குநர் மகிழ் திருமேனியை தொடர்ந்து ஃபைன் ட்யூன் பண்ணும் வேலையில் அஜித் இறங்கி இருப்பது தான் ஏகே 62 படத்தின் அறிவிப்பு தாமதமாக காரணம் என்று லேட்டஸ்ட் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த மாதமும் இல்லை
நடிகர் அஜித்தின் 62வது திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதமே ஆரம்பம் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த மார்ச் மாதம் கூட எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வராது என்கிற அதிர்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது. மார்ச் 2ம் வாரத்தில் ஏகே 62 ஷூட்டிங் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பல சீன்களை நடிகர் அஜித் தலையிட்டு மாற்ற சொல்லி விட்டதாக கூறுகின்றனர்.

கிரேட் எஸ்கேப்
ஆரம்பத்தில் அஜித் படத்தை மிஸ் செய்து விட்டோமே என வருத்தத்தில் இருந்த இயக்குநர் விக்னேஷ் தனது குழந்தைகளுடன் கொஞ்சி விளையாட நேரம் கிடைத்ததை எண்ணியும் மகிழ் திருமேனி இயக்குகிறார் என்கிற அறிவிப்பை கூட இன்னும் வெளியிடாமல் காலம் தாழ்த்துவதை பார்த்து அப்பாடா கிரேட் எஸ்கேப் என்றே மனுஷன் செம ஜாலியாக இருக்கிறாராம்.

மண்டையை பிய்த்துக் கொள்ளும் மகிழ் திருமேனி
இதுவரை இல்லாத அளவுக்கு தனது படத்தின் கதையை கேட்பது மட்டுமின்றி அதில் தனக்கு ஒரு சீன் பிடிக்கவில்லை என்றால் கூட உடனடியாக அந்த போர்ஷனையே தூக்கிவிட்டு வேறு ஒரு காட்சியை வைக்கச் சொல்லி விடுகிறார் நடிகர் அஜித் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால், முழு ஸ்க்ரிப்டையும் முடிக்கவே இயக்குநர் மகிழ் திருமேனி மண்டையை பிய்த்துக் கொண்டு வருவதாக கூறுகின்றனர்.

நீரவ் ஷாவை அனுப்பி
மேலும், மகிழ் திருமேனி கற்பனையாக இஷ்டத்துக்கு காட்சிகளை எழுதி அதிக நாட்களை இழுத்து விடக் கூடாது என்பதற்காக ஒளிப்பதிவாளர் நீரவ் ஷாவையே ஸ்க்ரிப்ட் டிஸ்கஷனில் உட்கார வைத்து உள்ளார் அஜித் என்கிற ஹாட் தகவல்கள் லீக் ஆகி உள்ளன. எந்த காட்சிக்கு எத்தனை நாட்கள் பிடிக்கும். படம் தாமதமாக ஆரம்பிக்கப்பட்டாலும் விஜய்யின் லியோ படத்துக்கு போட்டியாக ரிலீஸ் செய்யும் வகையில் உருவாக வேண்டும் என்பது தான் அஜித்தின் மாஸ்டர் பிளான் என்றும் நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

டூர் பாதிக்கக்கூடாது
ஒரு பக்கம் விஜய்யின் லியோ படத்துக்கு போட்டியாக ஏகே 62 படத்தை இயக்க அஜித் திட்டமிடுகிறார் என்றும் இன்னொரு பக்கம் தனது உலக பைக் டூர் பிளான் தள்ளிப் போய் விடக் கூடாது என்பதில் தான் அவர் முழு கவனமாக செயல்பட்டு வருகிறார் என்றும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மார்ச் மாத இறுதிக்குள் முழு ஸ்க்ரிப்டையும் மகிழ் திருமேனி முடித்தால் தான் அதிகாரப்பூர்வ அறிவிப்பே வெளியாகுமாம்.

இயக்குநரை மாற்றவும் ரெடி
இயக்குநர் மகிழ் திருமேனி சொன்ன டைமுக்குள் படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகளை முடித்து விட்டு முழு ஸ்க்ரிப்டையும் கொடுத்து அதனை படித்துப் பார்த்து விட்டு அஜித்துக்கு பிடிக்கவில்லை என்றால் மீண்டும் இயக்குநரை மாற்றவும் ரெடியாக இருப்பதால் தான் இதுவரை இயக்குநர் இவர் தாங்க என்பதை கூட சொல்ல முடியாமல் லைகா நிறுவனம் அமைதியாக இருப்பதாக பேச்சுக்கள் கிளம்பி உள்ளன. மகிழ் திருமேனி தனது ஒட்டுமொத்த வித்தையும் இறக்கி கிடைத்த வாய்ப்பை சூப்பராக பயன்படுத்த போராடி வருகிறாராம்.


Click it and Unblock the Notifications











