திரைத்துறையில் தொடரும் விவாகரத்து… இயக்குநர் பாலா மனைவியை பிரிய இதுதான் காரணம்?

சென்னை : பிரபல இயக்குநர் பாலா, 17 வருட திருமண வாழ்க்கையை முறித்துக் கொண்டது திரைத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

சேது படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பாலா. அவர் இயக்கி முதல் படத்திலேயே தேசிய அளவில் தமிழ் சினிமாவுக்கு பெயரை தேடித்தந்தார். இந்த திரைப்படம் விக்ரமின் சினிமா வாழ்க்கையிலும் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியது.

பாலாவின் படங்கள் எப்போதும் வித்தியாசமானதாகவே இவருக்கும் பிதாமகன், நந்தா, நான் கடவுள் போன்ற திரைப்படத்தை பார்ப்பதற்கே மனதிற்கு மிகக்பெரிய தைரியம் தேவைப்படும். அந்த அளவுக்கு ஒவ்வொரு காட்சியும் மனதை உருக்கிவிடும்.

2004ம் ஆண்டு திருமணம்

2004ம் ஆண்டு திருமணம்

தேசிய இயக்குநர் என பெயர் எடுத்த பாலா கடந்த 2004ம் ஆண்டு முத்துமலர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களது, திருமணம் மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது. இவங்களுடைய திருமணம் பெற்றோர்கள் பார்த்து வைத்த திருமணம். பாலாவின் திரைப்படத்தை பார்த்து பயந்து போன முத்துமலர் திருமணத்திற்கே தயக்கத்துடன் ஓகே சொல்லி உள்ளார்.

பாலாவை புரிந்து கொண்டார்

பாலாவை புரிந்து கொண்டார்

பாலாவின் படங்களைப் போலவே பாலாவை புரிந்து கொள்ளவே முடியவில்லை என்றும், மேலும் பாலா எப்போதும் அமைதியாகவே இருப்பாராம். நீண்ட நாள் போராட்டத்திற்கு பின் பாலாவை நன்றாக புரிந்து கொண்டு அவருக்கு ஏற்றார் போல தன்னை மாற்றிக்கொண்டார் முத்துமலர். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

எப்போதும் சண்டை

எப்போதும் சண்டை

படங்களில் மீது தீராத காதல் கொண்ட பாலா எப்போதும் படங்களை பற்றிய சிந்தனையிலேயே இருப்பாராம், மனைவியிடமோ குழந்தையிடமோ அதிகமாக பேசமாட்டாராம். இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு , அவ்வப்போது சண்டையும் ஏற்பட்டுள்ளது. இதனால், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பிரிருந்தே இருவரும் பிரிந்துதான் வாழ்ந்து வந்துள்ளார்கள். மார்ச் 5ந் தேதி தான் இருவரும் சட்டபூர்வமான விவகாரத்து கிடைத்துள்ளது. கிட்டத்தட்ட17 வருடம் சேர்ந்து வாழ்ந்த தம்பதியினர் பிரிந்தது திரைத்துறையில் பலரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

தொடரும் விவாகரத்து

தொடரும் விவாகரத்து

சமந்தா, நாகசைத்தன்யா, தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என திரைத்துறையில் அடுத்தடுத்து விவாகரத்து செய்தியை கேட்கும் போது மனம் பதைபதைப்படைகிறது. கணவன், மனைவி பிரிந்துவிடலாம், தாய், தந்தை பிரிந்தால் குழந்தைகளில் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடுமே என் அச்சம் பலரின் மனதை வாட்டுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X