Thug life movie: தக் லைஃப் படத்தின் தாமதத்திற்கு இதுவும் காரணமா?.. வெளியான சீக்ரெட்!

சென்னை: நடிகர் கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் கூட்டணியில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உருவாகி வருகிறது தக் லைஃப் படம். இந்த படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டில் வெளியாகி தொடர்ந்து பல இடங்களில் படத்தின் சூட்டிங் நடந்து வருகிறது. கடந்த மாதம் முதல் வாரத்தில் இந்த படத்தின் சூட்டிங் செர்பியாவில் நடக்கவிருந்த நிலையில் கமலின் அரசியல் பயணங்கள் காரணமாக இந்த படத்தின் சூட்டிங் நிறுத்தப்பட்டது. இதையடுத்து இந்த படத்திலிருந்து ஜெயம் ரவி கால்ஷீட் பிரச்சினையால் விலகினார். ஒரு மாதத்திற்கு அவர் கால்ஷீட் கொடுத்த நிலையில் செர்பியாவில் நடக்கவிருந்த சூட்டிங் கேன்சல் ஆனதால் அவரது கால்ஷீட் வீணடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

முன்னதாக இந்த படத்திலிருந்து இதே காரணங்களுக்காக துல்கர் சல்மான் விலகியதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் ஜெயம் ரவி இந்தப் படத்திலிருந்து விலகியதற்கு மற்றொரு காரணமும் கூறப்படுகிறது. நடிகர் சிம்பு இந்த படத்தில் என்ட்ரி கொடுத்ததால் அவர் இந்த படத்திலிருந்து விலகியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் துல்கர் சல்மானுக்கு பதில் சிம்புவும் ஜெயம் ரவிக்கு பதிலாக அரவிந்த்சாமியும் படத்தில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

Is this the reason for Kamal haasan -Maniratnam combination movie Thug life shooting delay

நடிகர் கமல்ஹாசன்: விக்ரம் படத்தின் இன்டஸ்ட்ரியல் ஹிட் காரணமாக நடிகர் கமல்ஹாசன் மிகப்பெரிய உற்சாகத்தில் உள்ளார். நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அடுத்தடுத்த படங்களில் அவர் தன்னை கமிட் செய்து வருகிறார். அரசியலிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது மணிரத்னம் கூட்டணியில் தக் லைஃப் படத்தில் இணைந்து நடிகர் கமல்ஹாசன் பணியாற்றி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் சென்னை உள்ளிட்ட பல இடங்களில் நடந்து வந்த நிலையில் கடந்த மாதம் முதல் வாரத்தில் செர்பியாவில் இந்த படத்தின் சூட்டிங் திட்டமிடப்பட்டது.

கேன்சலான செர்பியா சூட்டிங்: இதில் கமல்ஹாசனும் பங்கேற்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில் அரசியல் பயணங்கள் காரணமாக அவர் இந்த ஷூட்டிங்கில் பங்கேற்கவில்லை. இதையடுத்து கால்ஷீட் பிரச்சினை ஏற்பட்டதால் நடிகர் ஜெயம் ரவி, இந்த படத்திலிருந்து விலகினார். முன்னதாக துல்கர் சல்மானும் இதே காரணங்களுக்காக விலகியதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே துல்கர் சல்மானுக்கு பதில் சிம்புவும் ஜெயம் ரவிக்கு பதில் அரவிந்த்சாமியும் இந்த படத்தில் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே வரும் 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நிறைவடைந்த பின்பு கமல்ஹாசன் உள்ளிட்ட படக்குழுவினர் அடுத்தக்கட்ட சூட்டிங்கிற்காக செர்பியா செல்லவுள்ளனர்.

மீண்டும் செர்பியா சூட்டிங்: அங்கு மீண்டும் இந்த படத்தின் சூட்டிங் நடக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தின் சூட்டிங் கமல்ஹாசனின் அரசியல் பயணங்கள் மற்றும் அதையடுத்து ஜெயம் ரவி, துல்கர் சல்மான் உள்ளிட்டவர்கள் படத்திலிருந்து விலகியது உள்ளிட்ட காரணங்களால் தொடர்ந்து தள்ளிப் போய் வருகிறது. இதனுடைய இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசனின் தலையிடும் அதிகமாக காணப்படுவதாகவும் அதனால் இந்தப்படத்தின் சூட்டிங் தள்ளிப் போய் வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னதாக நாயகன் படத்தில் கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் இணைந்து மிகப்பெரிய பிரமாண்ட வெற்றியை கொடுத்திருந்தனர்.

தக் லைஃப் படத்தில் கமல் தலையீடு?: தொடர்ந்து இவர்கள் இருவரும் இணைந்து அடுத்தடுத்த படங்களில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருவரும் தற்போது 33 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணைந்துள்ளனர். தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் கமல்ஹாசனின் தலையீடு கண்டிப்பாக இருக்கும் என்று கூறப்படும் நிலையில் மணிரத்னம் மிகப்பெரிய இயக்குனராக இருந்த போதிலும் அவரது கதைக்களத்திலும் கமல்ஹாசன் தொடர்ந்து தலையிட்டு வருவதாகவும் இதனாலும் தக் லைஃப் படத்தின் சூட்டிங் தள்ளிப் போவதாகவும் தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. தன்னுடைய படம் சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காகவே கதைக்களத்தில் கமல்ஹாசன் தலையிட்டு வரும் நிலையில் இந்த படம் மிகப்பெரிய அளவில் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X