இப்போ தானே கல்யாணம் ஆச்சு..அதுக்குள்ள விக்னேஷ் சிவன் இப்படி செய்யலாமா? வருத்தத்தில் நயன்தாரா!

சென்னை : நடிகை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனின் செயலால் மன வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

போடா போடி திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான விக்னேஷ் சிவன். நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதியை வைத்து நானும் ரவுடிதான் திரைப்படத்தை இயக்கி இருந்தார்.

இந்த படத்திற்கு பின்னரே நயனும்,விக்கியும் இணைபிரியாத காதலர்களாக வலம் வந்தனர். கோவில்கள், சினிமா நிகழ்ச்சி, குடும்பவிழா, பிறந்தநாள் கொண்டாட்டம் என எதுவானாலும், இவர்கள் இருவரும் கைகளை கோர்த்தபடி அழகாக இருப்பார்கள்.

கல்யாணம்

கல்யாணம்

கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாக காதல் புறாவாக சுற்றிவந்த இந்த காதல் ஜோடி கடந்த ஜூன் 9ந் தேதி திருமண பந்தத்தில் இணைந்தனர். மகாபலிபுரம் ரிசாட்டில் இவர்களின் திருமணம் தடபுடலாக நடைபெற்றது. பல கோவில்களிலிருந்து வரவழைக்கப்பட்ட புரோகிதர்கள் திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் ரஜினிகாந்த், விஜய்சேதுபதி, அனிருத், சூர்யா, ஷாருக்கான், அட்லி ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இருவரும் பிஸி

இருவரும் பிஸி

திருமணத்திற்கு பிறகு நயன்தாரா ஜவான் திரைப்படத்தில் பிஸியாக இருக்கிறார். அதே போல,மாமல்லபுரத்தில் இன்று தொடங்கி உள்ள சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு நாளில் கலைநிகழ்ச்சிகள் நடத்தும் பொறுப்பை தமிழக அரசு விக்னேஷ் சிவனிடம் ஒப்படைத்து உள்ளது. கலை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மிகவும் மும்முரமாக கவனித்து வருகிறார்.

கடுப்பான நயனதாரா

கடுப்பான நயனதாரா

அதை தொடர்ந்து அஜித் விக்னேஷ் சிவன் படத்தில் நடிக்க உள்ளார். அனிருத் இசையமைக்கும் அஜித் 62 வது படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்க உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவன் சமந்தாவின் பெயரை பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் கடுப்பான நயனதாரா, என்னால் வந்ததுதான் இந்த வாய்ப்பு என்று விக்கியிடம் சண்டை போட்டதாக கோலிவுட் சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. இந்த செய்தியை கேள்விப்பட்ட ரசிகர்கள் பலர், இப்போ தானே கல்யாணம் ஆச்சு..அதுக்குள்ள விக்னேஷ் சிவன் இப்படி செய்யலாமா? கேட்டு வருகின்றனர்.

விறுவிறுப்பான படப்பிடிப்பு

விறுவிறுப்பான படப்பிடிப்பு

அஜித் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் 'ஏகே 61' படப்பிடிப்பில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான வலிமை படத்திற்கு ஏற்பட்ட எதிர்மறை விமர்சனங்கள் இந்த படத்திற்கு வந்துவிடக்கூடாது என்பதற்காக அஜித் மற்றும் வினோத் கடுமையாக உழைத்து வருகின்றனர். அதற்காக ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து தான் AK61 திரைப்படத்தில் வினோத் கையாண்டுள்ளதாக கூறப்படுகிறது. வங்கி கொள்ளையை மையமாக வைத்தி இப்படத்தின் திரைக்கதையையும் விறுவிறுப்பாக அமைக்கும் பணியில் வினோத் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார். தற்போழுது இந்த படத்தின் படப்பிடிப்பு புனேவில் நடைபெற்று வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X