கவுதமி கமலை பிரிய ஸ்ருதியிடம் தூள் பறந்த அதிகாரம், ஓவர் கண்டிப்பு காரணமா?
சென்னை: ஸ்ருதி ஹாஸனிடம் கவுதமி தனது அதிகாரத்தை காட்டியதால் ஏற்பட்ட பிரச்சனை தான் அவர் கமலை பிரிய காரணம் என்று கூறப்படுகிறது.
கணவர் சந்தீபை பிரிந்த நடிகை கவுதமிக்கு உலக நாயகன் கமல் ஹாஸன் ஆதரவளித்தார். இருவரும் திருமணம் செய்யாமலேயே ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.
13 ஆண்டுகளாக ஒன்றாக இருந்தவர்கள் தற்போது பிரிந்துவிட்டனர்.

காரணம்
கமல் ஹாஸனை பிரியும் முடிவு இதயத்தை நொறுக்குவதாக உள்ளதாக கவுதமி ட்விட்டரில் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் கமலை பிரிவதற்கான காரணத்தை தெரிவிக்க விரும்பவில்லை.

ஸ்ருதி
கவுதமிக்கும், ஸ்ருதி ஹாஸனுக்கும் இடையே கடந்த ஆறு மாதங்களாகவே பிரச்சனையாம். கவுதமி ஸ்ருதியிடம் மிகவும் கண்டிப்புடன் நடந்து கொண்டாராம். அது ஸ்ருதிக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லையாம்.

கவுதமி
கவுதமி கமல் வீட்டில் வேலை செய்பவர்களிடம் அதிகாரமாக நடந்து கொள்வாராம். அதே போன்று அவர் ஸ்ருதியிடமும் தனது அதிகாரத்தை காட்ட அது பிரச்சனையாகிவிட்டதாம்.

கமல்
கவுதமி ஸ்ருதியிடம் அதிகாரம் காட்டிய பிரச்சனை கமல் வரைக்கும் சென்றதாம். அப்போது வேறு சில பிரச்சனைகளும் ஏற்பட்டு கவுதமி கமலை பிரிய வேண்டிய நிலையாகிவிட்டதாம்.


Click it and Unblock the Notifications











