என்னது தோழியா?... தனுஷின் மீது உச்சகட்ட கோபத்தில் இருக்கும் ரசிகர்கள் !

சென்னை : ஐஸ்வர்யாவை தனுஷ் தோழி என்று ட்விட்டரில் பதிவிட்டதால் ரசிகர்கள் அவர் மீது மிகுந்த கோபத்தில் உள்ளனர்.

காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்த நட்சத்திர தம்பதியினர், கடந்த ஜனவரி மாதம் பிரிவதாக அறிவித்தனர். இது தனுஷின் ஒட்டு மொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜா இவர்கள் விவாகரத்து செய்ய, தற்போது பிரிந்து தான் இருக்கிறார்கள் விரைவில் சேர்ந்து விடுவார்கள் என்று கூறியிருந்தார்.

பிரிந்தனர்

பிரிந்தனர்

பிரிவு அறிவிப்புக்கு பிறகு தனுஷ், வாத்தி, திருச்சிற்றம் பலம், நானே வருவேன் போன்ற திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அதேபோல ஐஸ்வர்யாவும் ஆல்பம் இயக்குவதில் தீவிரமாக இருந்தார். வாத்தி படப்பிடிப்புக்காக ஹைதராபாத்தில் நட்சத்திர ஒட்டலில் இருவரும் தங்கி இருந்த போதும் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ளவில்லை.

பயணி

பயணி

இதையடுத்து, ஐஸ்வர்யா இயக்கிய பயணி இசை வீடியோவை நேற்று ரஜினிகாந்த் வெளியிட்டு இருந்தார். இந்த ஆல்பம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என 4 மொழிகளில் வெளியானது. தமிழில் இந்த பாடலுக்கு பயணி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த பாடலை அனிருத் பாடி இருந்தார்.

Congrats my friend

Congrats my friend

நேற்று வெளியான இந்த பாடலுக்கு பலரும் ஐஸ்வர்யாவுக்கு இணையத்தில் வாழ்த்து தெரிவித்து வந்தனர். நடிகர் தனுஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் Congrats my friend ,God bless என்று பதிவிட்டு வாழ்த்து தெரிவித்து இருந்தார். இதைப்பார்த்த ரசிகர்கள் ஏகத்திற்கும் கடுப்பாகி தனுஷை கண்டபடி விமர்சித்து வருகின்றனர்.

என்னது பிரண்டா

என்னது பிரண்டா

இந்த பிரிவு நிரந்தரம் இல்லை இவர்கள் விரைவில் சேர்ந்து விடுவார்கள் என்று ரசிகர்களும், நண்பர்களும் எதிர்பார்த்து காத்திருக்கும் நேரத்தில், தனுஷ் பிரண்ட் என கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தனுஷின் இந்த செயலால் ரசிகர்கள் அவர் மீது உச்ச கட்ட கோபத்தில் உள்ளனர்.

இந்த மாதிரி நட்பை பார்த்தது இல்லை

இந்த மாதிரி நட்பை பார்த்தது இல்லை

நானும் எத்தனையோ நட்பு பாத்திருக்கேன்... ஆனா இந்த மாதிரி நட்பா... இப்ப தான் பாக்குறேன் என்று பதிவிட்டுள்ளார். அந்த குழந்தைகளுக்காகவாவது சேர்ந்து விடுங்கள் என்று கருத்துக் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X