கங்குவா இசைவெளியீட்டு விழாவிற்கு ஜோதிகா ஏன் வரல? சூர்யா நொந்து பேசியதை கவனிச்சீங்களா?

சென்னை: நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியிருக்கும் திரைப்படம் கங்குவா. இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இன்று அனைத்து சோஷியல் மீடியாவிலும் சூர்யா பேசியது டிரெண்டாக்கப்பட்டு வருகிறது. இந்த விழாவில் பலரும் கலந்து கொண்ட போதும். இதில் நடிகை ஜோதிகா கலந்து கொள்ளாதது அவரது ரசிகர்களிடையே பல கேள்விகளை எழுப்பி உள்ளது.

சிவா இயக்கத்தில் சூர்யா ஹீரோவாக நடித்திருக்கும் திரைப்படம் கங்குவா. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகி உள்ள இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாந்த் இசையமைத்துள்ளார். இப்படத்தில் இருந்து வெளியான ஆதி நெருப்பே பாடல், கங்குவா பாடல், மன்னிப்பு பாடல் என அனைத்தும் மிகப்பெரிய அளவில் வைரலாகி உள்ளது. இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜாேடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்துள்ளார். மேலும்,பாபி தியோல், நட்ராஜ், கருணாஸ், யோகிபாபு என பல நடிகர் நடித்துள்ளனர்

kanguva audio launch jyothika

கங்குவா இசைவெளியீட்டு விழா: 3டி முறையில் சரித்திர படமாக உருவாகி இருக்கும், இந்த படம் அடுத்த மாதம் 14ம் தேதி 36 மொழிகளில் வெளியாகி உள்ளது. இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில, நேற்று சென்னையில் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இசை வெளியீட்டு விழாவில், சூர்யா, திஷா பதானி, பாபி தியோல், சிவா, நட்ராஜ், போஸ் வெங்கட்,கருணாஸ், ஞானவேல் ராஜா, சிவகுமார், கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்.அதே போல சூர்யாவின் அம்மா, சூர்யாவின் சகோதரி கலந்து கொண்டார். ஆனால், இந்த இசைவெளியீட்டு விழாவில் ஜாேதிகா கலந்து கொள்ளாதது பேசு பொருளாகி இருக்கிறது.

இதுதான் காரணமா: சூர்யாவின் வளர்ச்சிக்கு துணையாக இருக்கும் அவரது மனைவி ஜோதிகா விழாக்களிலும் கட்டாயம் கலந்து கொள்வார். அதுவும் வரலாற்று சிறப்பு மிக்க கங்குவா படத்தில் அவர் நிச்சயம் கலந்து கொண்டு இருக்க வேண்டும். ஆனால் அவர் கலந்து கொள்ள்வில்லை. ஏற்கனவே, குடும்ப பிரச்சனை காரணமாக சூர்யா தனது குடும்பத்தை விட்டு குழந்தைகளோடு மும்பையில் செட்டில் ஆகிவிட்டார். இருவரும் பிரிய போகிறார்கள் என்று செய்தி பரவி வரும் இந்த நேரத்தில், இசைவெளியீட்டுக்கு அவர் வராதது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. கங்குவா விழாவிற்கு சிவகுமார் மற்றும் அவரது குடும்பத்தினர் வருவதால், ஜோதிகா இந்த விழாவை தவிர்த்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

அன்பை மட்டுமே கொடுப்போம்: நேற்று இசைவெளியீட்டு விழாவில் பேசிய சூர்யா, சில விஷயத்தை மனதில் மறைத்துவைத்துக்கொண்டு நொந்து பேசியதை பார்க்க முடிந்தது. அதாவது, இயக்குநர் சிவாவிடம் இருந்து இரண்டு நல்ல விஷயத்தை நான் கற்றுக்கொண்டேன். அதாவது எது நடந்தாலும் நல்லதே நடக்கும் என்று அடிக்கடி சொல்லுவார். அதே போல உங்களை யாராவது கஷ்டப்படுத்த நினைச்சா, உங்களை யாராவது வருத்தப்பட வைத்தா, அந்த சக்தியை அவர்களுக்கு கொடுக்காதீங்க என்று சொல்லுவார்.அவர் சொன்ன அந்த வார்த்தை எனக்கு பிடித்து இருந்தது. ஆரம்பத்தில் என்னடானு யோசித்தேன் ஆனால் இப்போது அது என்ன என்று எனக்கு புரிகிறது என்றார். மேலும் நாம அன்பை மட்டுமே கொடுப்போம், யார் என்ன வெறுப்பை விதைத்தாலும், நாம அன்பை மட்டுமே கொடுப்போம், அதனாலேயே நாம உயர்வோம் என்று பேசி இருந்தார். அவரின் இந்த பேச்சு தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X