நயன்தாரா விக்கிய கல்யாணம் பண்ண இதுதான் காரணமா?: குக் வித் கோமாளி ராகுல் தாத்தா சொன்ன ரகசியம்

சென்னை: குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான ராகுல் தாத்தா தனது சினிமா அனுபவங்கள் குறித்து பேசியுள்ளார்.

அதில், நயன்-விக்கி கல்யாணத்துக்கு நான் தான் முக்கிய காரணம் என குக் வித் கோமாளி ராகுல் தாத்தா தெரிவித்துள்ளார்.

அதுமட்டும் இல்லாமல், நயன்தாரா விக்னேஷ் சிவனை திருமணம் செய்ய காரணமாக இருந்த ரகசியத்தையும் போட்டுடைத்துள்ளார்.

60 ஆண்டு சினிமா அனுபவம்

60 ஆண்டு சினிமா அனுபவம்

60 ஆண்டுகளாக சினிமாவில் பயணித்து வரும் ராகுல் தாத்தா, எம்.ஜி.ஆர், சிவாஜி போன்ற மூத்த கலைஞர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், அவரது பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், "எம்,ஜி.ஆர் தேர்தலில் நின்ற போது, அவருடன் பிரசாரத்திற்குச் சென்றதாகவும், அவர் வெற்றிப் பெற்று முதலமைச்சர் ஆகிவிட்டார்" எனத் தெரிவித்துள்ளார்.

குக் வித் கோமாளி

குக் வித் கோமாளி

இதனிடையே சமீபத்தில் ராகுல் தாத்தா விஜய் டிவியின் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். அந்நிகழ்ச்சியில், "20 வயது பையன் என்னை கலாய்ப்பான், அப்போதெல்லாம் மன வருத்தமாக தான் இருக்கும். ஆனால், நானும் பதிலுக்கு கலாய்த்துவிடுவேன்" எனக் கூறியுள்ளார். மேலும், "அங்கிருக்கும் மணிமேகலை, தாமு, பாலா என அனைவரும் என்னுடைய ரசிகர்கள்தான். அப்போது அவருடைய வயசு என்ன உன் வயசு என்ன, அவர் வயதுக்கு மரியாதை கொடுத்து பேசுங்கன்னு தாமு அனைவரிடம் சொல்லுவார்" என பேசியுள்ளார்.

பெரிய ரசிகர்கள் கூட்டம்

பெரிய ரசிகர்கள் கூட்டம்

தொடர்ந்து பேசியுள்ள ராகுல் தாத்தா, "குக் வித் கோமாளி எனக்கு இன்னும் மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை தந்ததாகவும், வெளியே போகும் போதெல்லாம் குழந்தைகள் என்னை ராகுல் தாத்தா என அழைத்து, என்னிடம் கை கொடுப்பார்கள். அந்த அளவுக்கு இந்த ஷோ என்னை வளர்த்துவிட்டதாக" ராகுல் தாத்தா கூறியுள்ளார்.

நானும் ரவுடி தான்

நானும் ரவுடி தான்

ராகுல் தாத்தாவிற்கு மிகப்பெரிய அடையாளம் கொடுத்தது 'நானும் ரவுடிதான்' படம் தான். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, பார்த்திபன், ஆர்.ஜே. பாலாஜி உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படம், சூப்ப ஹிட் அடித்தது. அதில், பழைய ரவுடியாக காமெடியில் ரவுசு காட்டியிருப்பார் ராகுல் தாத்தா. இந்தப் படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்துள்ள ராகுல் தாத்தா "தனுஷுடன் மாரி படத்தில் கமிட் ஆகிருந்ததாகவும், அப்போது தான் விக்னேஷ் சிவன் என்னை நானும் ரவுடிதான் படத்தில் நடிக்க கூட்டிப் போய்விட்டதாகவும்" கூறியுள்ளார்.

Recommended Video

Nayanthara | Mumbai Airport-ல் செம கெத்தாக வந்த Nayan *Kollywood | Filmibeat Tami
நயன்-விக்கி மேரேஜ் சீக்ரெட்.

நயன்-விக்கி மேரேஜ் சீக்ரெட்.

"நானும் ரவுடிதான்' சூட்டிங்கில் விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவரையும் செம்மையாக கலாய்ப்பேன்" எனக் கூறியுள்ளார் ராகுல் தாத்தா. முக்கியமாக இருவரது திருமணம் குறித்த ரகசியத்தையும் பேசியுள்ளார். அதாவது "விக்னேஷ் சிவன் பார்ப்பதற்கு பிரபுதேவா மாதிரி இருப்பதாக, அவர் நயன்தாராவிடம் கூறியதாகவும், அதனாலேயே நயன் விக்கியை காதலித்து திருமணம் செய்துகொண்டதாகவும்" தெரிவித்துள்ளார். விக்கியுடனான காதலுக்கு முன்பு, பிரபுதேவாவுடன் நயன்தாரா திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X