ரஜினியின் சீக்ரெட் மந்த்ரா இதுதானா.. தெறிக்கவிடும் தர்பார் ஜிம் போஸ்டர்!

Recommended Video

முருகதாஸின் சந்திரமுகி 2 | DARBAR SPECIAL INTERVIEW | V-CONNECT | FILMIBEAT TAMIL

சென்னை: ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் திரைப்படம் வரும் ஜனவரி 9ம் தேதி திரைக்கு வருகிறது.

லைகா புரொடக்‌ஷன் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள தர்பார் படத்துக்கு விமானத்தில் விளம்பரம், பிரம்மாண்ட பிரஸ் மீட் என விளம்பரத்திலும் லைகா பட்டையை கிளப்புகிறது.

இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள தர்பார் ஜிம் போஸ்டர் இளைஞர்களுக்கு புது எனர்ஜி கொடுத்து வைரலாகி வருகிறது.

சினிமாவில் ஒர்க்கவுட்

கெளதம் மேனனின் வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யா வொர்க்கவுட் செய்யும் காட்சிகள் மிகப்பெரிய அளவில் இளைஞர்களுக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தது. ஐ படத்தில் நடிகர் விக்ரம் ஜிம் மாஸ்டராகவும், மிஸ்டர் தமிழ்நாடாகவும் நடித்து அசத்தியிருந்தார். தற்போது ரஜினியின் தர்பார் படத்திலும் ஜிம் ஒர்க்கவுட் சீன் வேற லெவலில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வைரலாகும் போஸ்டர்

தர்பார் படத்தின் ஒவ்வொரு போஸ்டரும் வேற லெவலில் வைரலாகி வருகிறது. தற்போது வெளியாகியுள்ள ஜிம் போஸ்டர் இளைஞர்களுக்கு புது எனர்ஜி கொடுத்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். 70 வயசுல சூப்பர்ஸ்டாரே இப்படி ஒர்க்கவுட் செய்கிறாரே என ரசிகர்கள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த இந்த போஸ்டர் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீக்ரெட் மந்த்ரா

இந்த வயசுலையும் ரஜினியின் எனர்ஜிக்கு அவர் செய்யும் யோகா மற்றும் ஒர்க்கவுட் தான் சீக்ரெட் மந்த்ராவாக இருக்கிறது. மேலும், இந்த போஸ்டரில், உலகமே உன்னை கீழே அழுத்தினாலும், நீ மேலே எழுந்து வா எனும் அர்த்தத்தில் "When the world pushes you, Push back" என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது.

தெறிக்கவிடும் புதிய புரொமோ

லவ் புரொமோவை தொடர்ந்து தெறிக்கவிடும் ஆக்‌ஷன் புரொமோவையும் தர்பார் படக்குழுவினர் இறக்கியுள்ளனர். அப்டேட் கேட்டு தொல்லை செய்த ரசிகர்களை திக்குமுக்காட செய்யும் அளவுக்கு லைகா நிறுவனம் அடுத்தடுத்த புரொமோக்களையும் போஸ்டர்களையும் போட்டு வருகிறது.

ஸ்ட்ரெய்ட்டா ஹார்ட்டு தான்

ரஜினி படங்கள் என்றாலே பஞ்ச் வசனங்கள் தான் நினைவுக்கு வரும். சமீப காலமாக அந்த பஞ்ச் வசனங்கள் குறைந்திருந்தன. அந்த குறைகளை தெரியாமல் ஆக்க ஏ.ஆர். முருகதாஸ், தர்பார் படம் முழுவதும் பஞ்ச் வசனங்களாக வைத்துள்ளார் போல தெரிகிறது. ஆக்‌ஷன் புரொமோவில் ரஜினி பேசும், இந்த வானத்துல சுடுறது, பூமியில சுடுறது ஸ்ட்ரெய்ட்டா ஹார்ட்டுதான் என துப்பாக்கியில் விளையாடும் பஞ்ச் வசனமும் சமூக வலைதளத்தில் டிரெண்டாகி வருகிறது.

அப்டேட் கேட்க மாட்டேன் பா

சன் பிக்சர்ஸ் அளவுக்கு லைகா நிறுவனம் அப்டேட்களை ஒழுங்கா தரமாட்றாங்க என்ற குற்றச்சாட்டுக்களை முன் வைத்து வந்த ரசிகர்களுக்கு அடுத்தடுத்த அதிரடிகளை இறக்கி அசத்தி வருகிறது லைகா. இதை பார்த்த நெட்டிசன்கள், ஏன்பா லைகா நான் அப்டேட் கேட்க மாட்டேன் பா முடியல என கமெண்ட் போடும் அளவுக்கு ஆகியுள்ளனர்.

கும்பகர்ணன்

லைகா அட்மின் கும்பகர்ணன் மாதிரி தூங்குனா தூங்கிட்டே இருப்பாரு.. முழிச்சுட்டா நம்மளை தூங்க விட மாட்டாரு என ஜாலியாக மீம்ஸ் போட்டும் ரசிகர்கள் என்ஜாய் பண்ணுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X