தோண்டத் தோண்ட வெளியாகும் மர்மம்.. சூர்ப்பனகை படத்தின் கதை இதுதானா!

சென்னை : தமிழில் வரிசையாக த்ரில்லர் திரைப்படங்கள் உருவாகி வருகிறது அந்த வகையில் நடிகை ரெஜினா கெஸன்ட்ரா இப்பொழுது த்ரில்லர் கதையில் நடித்து வருகிறார்.

திருடன் போலீஸ், கண்ணாடி, அண்ணனுக்கு ஜே உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் கார்த்திக் ராஜு இப்பொழுது சூர்ப்பனகை படத்தை இயக்கியுள்ளார்.

அகழ்வாராய்ச்சியில் கிடைக்கும் சில திடுக்கிடும் தகவல்களின் பின்னணியில் மிரட்டும் த்ரில்லர் பேய் படமாக உருவாகியுள்ள சூர்ப்பனகை கதை பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

கவர்ச்சியை அள்ளித் தெளித்து

கவர்ச்சியை அள்ளித் தெளித்து

தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் மிகச் சிறந்த நடிகையாக ஜொலித்துக் கொண்டிருக்கும் நடிகை ரெஜினா கெஸன்ட்ரா கவர்ச்சியை அள்ளித் தெளித்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான கசட தபர நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்ததாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதையில் நடித்து வருகிறார்.

நடுங்க வைக்கும் த்ரில்லர்

நடுங்க வைக்கும் த்ரில்லர்

திருடன் போலீஸ்,அண்ணனுக்கு ஜே, கண்ணாடி போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் கார்த்திக் ராஜூ இயக்கத்தில் உருவாகியுள்ள சூர்ப்பனகை திரைப்படத்தில் ரெஜினா கஸன்ட்ரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தொல்லியல் ஆராய்ச்சியை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த திரைப்படம் நடுங்க வைக்கும் த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது.

தொல்லியல் ஆராய்ச்சியாளராக

தொல்லியல் ஆராய்ச்சியாளராக

மிகவும் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாக்கியுள்ள இந்த படத்தில் ரெஜினா கஸன்ட்ரா இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அதில் ஒன்று முன் ஜென்மத்தை மையப்படுத்தியதாகும். அதேசமயம் தொல்லியல் ஆராய்ச்சியாளராகவும் இந்த படத்தில் நடித்துள்ளார்.

முன் ஜென்மம்

முன் ஜென்மம்

சூர்ப்பனகை படத்தின் மிரட்டும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்ப்பை பெற்றிருந்தது. இதுவரை கவர்ச்சி கதாபாத்திரங்களிலும் க்யூட்டான ஹீரோயின் வேடங்களில் மட்டுமே தோன்றிய நடிகை ரெஜினா இப்பொழுது மிரட்டும் பேயாக இந்த படத்தில் நடித்திருப்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சூர்ப்பனகை படத்தின் கதை தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் பணிபுரியும் ரெஜினா கஸன்ட்ரா ஆய்வில் ஈடுபடும் போது கிடைக்கக்கூடிய சில முக்கிய ஆதாரங்களை வைத்து அவரது முன் ஜென்மம் அவருக்கு நினைவுக்கு வருகிறது என்பதே இந்த படத்தின் கதைக் களமாக உருவாகிறது என தெரியவந்துள்ளது. மிக விரைவில் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X