விஸ்வாசம் படத்தின் கதை இது தானா?: என்ன 'தல' இப்படி இருக்க? #Viswasam

By Siva

சென்னை: விஸ்வாசம் படத்தின் கதை குறித்து தெரிய வந்துள்ளது.

சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்துள்ள விஸ்வாசம் படம் பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக ரிலீஸாக உள்ளது. படத்தில் வரும் கண்ணான கண்ணே பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்நிலையில் படத்தின் கதை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

அஜித்

அஜித்

விஸ்வாசம் படத்தில் அஜித் யாருக்கும் அடங்காத திமிர் பிடித்த தாதாவாக வருகிறாராம். அஜித்துக்கு திருமணம் செய்து வைத்துவிட்டால் நிச்சயம் அடங்கிவிடுவார் என்று குடும்பத்தார் முடிவு செய்து பெண் பார்க்கிறார்களாம். தாதாவுக்கு யார் பெண் தருவார்கள். அதனால் அஜித்தை பற்றிய உண்மையை மறைத்து பெண் தேடுகிறார்களாம்.

நயன்தாரா

நயன்தாரா

பக்கத்து ஊரை சேர்ந்த நயன்தாராவிடம் அஜித் நல்லவர், வல்லவர், நாலும் தெரிந்தவர், பாசக்காரர் என்று ஓவர் பில்ட்அப் கொடுத்து அவரை தலக்கு திருமணம் செய்து வைக்கிறார்களாம். திருமணத்திற்கு பிறகு தனது கணவர் ஒரு தாதா என்பதை தெரிந்து கொண்ட நயன்தாரா அவரை பிரிந்து சென்று தனியாக வாழ்கிறாராம்.

பிரச்சனை

பிரச்சனை

கணவரை பிரிந்த நயன்தாரா சொந்தமாக வியாபாரம் செய்கிறாராம். அந்த வியாபாரத்தில் பெரிய பிரச்சனை ஏற்படுகிறதாம். அந்த பிரச்சனையில் இருந்து நயன்தாராவை எப்படி காப்பாற்றி அவருடன் மீண்டும் சேர்கிறார் அஜித் என்பது தான் கதையாம். இதை சிவா தான் உறுதி செய்ய வேண்டும்.

யு சான்று

யு சான்று

விஸ்வாசம் குடும்பத்துடன் பார்க்கக் கூடிய படம் என்று யு சான்றிதழ் அளித்துள்ளது சென்சார் போர்டு. படத்தின் புகைப்படங்களில் அஜித்துக்கு பெரிய குடும்பம் இருப்பது தெரிகிறது. படம் நிச்சயம் குடும்ப ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X