நவரசா ஆந்தாலஜி திரைப்படத்தில் கார்த்திக் நரேன் இயக்கும் பாகத்தின் தலைப்பு இதுதானா!?

சென்னை: மணிரத்னம், ஜெயேந்திரா தயாரிப்பில் உருவாகி வரும் ஆந்தாலஜி திரைப்படம் "நவரசா".

பிரபல முன்னனி நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள் கூட்டணியில் 9 கதைகளாக தயாராகி வருகிறது.

இந்த ஆந்தாலஜி திரைப்படம் நேரடியாக Netflix ல் ஆகஸ்ட் மாதம் வெளிவரவுள்ளது. ரிலிஸ் தேதி குறித்த தகவல்கள் ஏதும் இதுவரையில் வெளிவரவில்லை.

முன்னனி இயக்குனர்கள்

முன்னனி இயக்குனர்கள்

கெளதம் மேனன், ஹலிதா சமீம், பிஜோய் நம்பியார், கார்த்திக் சுப்புராஜ், கார்த்திக் நரேன், ரதிந்தீரன், அரவிந்த்சாமி, ப்ரியதர்ஷன், வஸந்த்,என முன்னணி இயக்குனர்களின் கூட்டணியில் தயாராகி வரும் திரைப்படம் நவரசா. இந்த படம் மொத்தம் 9 கதைகளை கொண்டுள்ளது.

இசை, ஒளிப்பதிவு

இசை, ஒளிப்பதிவு

சூரியா, விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், அரவிந்த் சாமி, சித்தார்த், அசோக் செல்வன், அதிதி பாலன், ரேவதி, பார்வதி, ஐஸ்வர்யா ராஜேஷ், நித்யா மேனன், ரித்விகா உள்ளிட்ட முன்னனி நடிகர்,நடிகைகளும் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
ஏ.ஆர். ரஹ்மான், இமான், ஜிப்ரான், கோவிந் வசந்தா உள்ளிட்டோர் இசை அமைத்துள்ளனர். சந்தோஷ் சிவன் மற்றும் சில ஒளிப்பதிவாளர்கள் இந்த படத்தில் பணியாற்றியுள்ளனர்.

வெற்றி படங்கள்

வெற்றி படங்கள்

இந்த படத்தின் 9 கதைகளில் ஒரு கதையை கார்த்திக் நரேன் இயக்கியுள்ளார். துருவங்கள் பதினாறு, மாஃபியா ஆகிய வெற்றி படங்களை இயக்கியவர் கார்த்திக் நரேன். இவர் தனுஷை வைத்து அடுத்த படத்தை இயக்கி வருகிறார். இவரின் இயக்கத்தில் நரகாசூரன் திரைப்படம் இந்த மாதம் OTT யில் வெளிவரவுள்ளது.

அரவிந்த் சாமி நடிப்பில்

அரவிந்த் சாமி நடிப்பில்

நவரசா குறித்து கார்த்திக் நரேன் சமீபத்தில் அளித்த பேட்டியில், நான் இயக்கும் கதையில், அரவிந்தசாமி, பிரசன்னா, பூர்ணா உள்ளிட்டோர் நடிக்கின்றனர் என கூறியுள்ளார். அக்னி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படம் 27 நிமிடங்கள் ஓடக்கூடியது என கூறியுள்ளார்.

More from Filmibeat

Read more about: navarasa நவரசா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X