தலைவர் 169 படத்திற்கு இப்படி ஒரு டைட்டிலா...செம மாஸா இருக்கும் போலவே

சென்னை : கடந்த சில நாட்களாகவே ரஜினி நடிக்கும் தலைவர் 169 படத்தின் டைட்டில் என்னவாக இருக்கும் என்பது தான் தீவிர விவாதமாக சோஷியல் மீடியாவில் ஓடிக் கொண்டிருக்கிறது.

அண்ணாத்த படத்திற்கு பிறகு சன் பிக்சர்ஸ் உடன் ரஜினி இணைந்துள்ள படம் தலைவர் 169 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை டைரக்டர் நெல்சன் திலீப்குமார் இயக்குவதாகவும், அனிருத் இசையமைக்க போவதாகவும் ஸ்பெஷல் வீடியோவுடன் பிப்ரவரி 10 ம் தேதி அறிவிக்கப்பட்டது.

ரஜினிக்கு ஜோடி இவர் தானா

ரஜினிக்கு ஜோடி இவர் தானா

இந்த படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே இந்த படம் பற்றிய பல தகவல்கள் இணையத்தில் அவ்வப்போது பரவி வருகிறது. அதில், தலைவர் 169 படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிக்கிறாராம். எந்திரன் படத்திற்கு பிறகு ஐஸ்வர்யா, மீண்டும் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கிறாராம்.

இவங்களுக்கு கெஸ்ட் ரோலா

இவங்களுக்கு கெஸ்ட் ரோலா

அதோடு தலைவர் 169 படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சிம்புவிற்கும் முக்கிய ரோல் உள்ளதாம். இதனால் நெல்சன் படங்களில் வழக்கமாக ஒரு பாடல் எழுதும் சிவகார்த்திகேயன் இந்த படத்தில் கெஸ்ட் ரோல் செய்யலாம் என கூறப்படுகிறது. சிம்புவும் பாடல் மட்டும் பாட போகிறாரா அல்லது கெஸ்ட் ரோல் செய்ய போகிறாரா என்பது தெரியவில்லை.

அப்பா-மகள் சென்டிமென்ட்

அப்பா-மகள் சென்டிமென்ட்

டாக்டர், எதற்கும் துணிந்தவன் படங்களின் ஹீரோயின் பிரியங்கா அருள்மோகன் இந்த படத்தில் ரஜினியின் மகளாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தர்பார் படத்திற்கு பிறகு இந்த படத்திலும் ரஜினிக்கு அப்பா-மகள் சென்டிமென்ட் சீன் இருக்கும் என கூறப்படுகிறது.

தலைவர் 169 டைட்டில்

தலைவர் 169 டைட்டில்

இதில் லேட்டஸ்ட் தகவலே தலைவர் 169 படத்திற்கு டைட்டில் என்ன என்பது தான். இந்த படத்தின் டைட்டில் ஒரே வார்த்தையாக அமைக்கப்பட உள்ளதாகவும், அதே சமயம் ஆங்கிலத்தில் டைட்டில் வைக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. டாக்டர், பீஸ்ட் ஆகியவற்றை போல் தலைவர் 169 டைட்டில் இருக்குமாம். பாஸ் என்று கூட தலைப்பு வைக்கப்பட வாய்ப்புள்ளதாக மற்றொரு தகவலும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X