AK61 படத்தின் தலைப்பு இதுதானா?… அட சூப்பரான அப்டேட்டா இருக்கே?
சென்னை : அஜித் 61 திரைப்படத்தின் தலைப்பு குறித்த முக்கியமான தகவல் வெளியாகி உள்ளது.
ஏகே 61 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மஞ்சு வாரியர் மற்றும் ஜான் கோக்கன், நடிகர் வீராவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.
ஏகே 61' திரைப்படத்தை இந்தாண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

'ஏகே 61
ஹெச்.வினோத், அஜித், போனி கபூர் கூட்டணியானது 'நேர்கொண்ட பார்வை' மற்றும் 'வலிமை' படங்களின் வெற்றிக்கு பிறகு அஜித்தின் 'ஏகே 61' படத்தில் இணைந்துள்ளது. மேலும் படத்தின் ஷுட்டிங் பணி கடந்த மாதம் ஹைதராபாத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இரட்டை கதாபாத்திரம்
வங்கி கொள்ளையை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்தில் ஹீரோ, வில்லன் என அஜித், இரண்டு விதமான கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், அதில் ஒன்று வயதான கல்லூரி பேராசிரியராகவும், மற்றொன்று கதாபாத்திரம் செம ஸ்மார்ட் மற்றும் ஸ்லிம் ஃபிட்டான இளமை தோற்றத்திலும் நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்திற்காக உடற்பயிற்சி செய்து உடல் எடையை நடிகர் அஜித் குறைத்துள்ளார்.

மஞ்சு வாரியர்
இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக அசுரன் படப்புகழ் மஞ்சு வாரியர் நடிப்பது உறுதியாகி உள்ளது. ஏகே 61 படப்பிடிப்பிற்காக ஹைதராபாத்தில் உள்ள ஒரு திரைப்பட நகரத்தில் பிரமாண்டமான மவுண்ட் ரோடு செட் அமைக்கப்பட்டுள்ளது, மேலும் இப்படத்தின் பெரும்பகுதி காட்சிகள் இந்த செட்டில் தான் படமாக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

AK61 படத்தின் தலைப்பு
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த AK61 படத்தில் டைட்டில் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இப்படத்திற்கு 'வீரா' என தலைப்பு வைத்துள்ளதாக சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. அஜித்தின் முந்தைய படங்கள் வில்லன், வரலாறு, விவேகம், வீரம், விஸ்வாசம், வலிமை போன்ற திரைப்படங்கள் "V"எனும் எழுத்தில் தொடங்குவதால், இதனால், அதே சென்டிமென்ட்டை இப்படத்திலும் தொடர்ந்துள்ளதாக தெரிவிக்கின்றனர். ஆனால், இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை.

அஜித் 62
அஜித் 61 படத்தை அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கும் அஜித் 62 திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் தனது கடின உழைப்பால் வாழ்க்கையில் உயர்ந்த ஒருவரின் கதாபாத்திரத்தில் அஜித் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இளைஞரான கெட்டப்பிலும் பின் உழைத்து முன்னுக்கு வந்த இளைஞனாகவும் அவர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











