வெற்றிமாறன் - சூரி படத்தின் தலைப்பு இதுதானா!?
சென்னை: இயக்குனர் வெற்றிமாறன் அடுத்ததாக நகைச்சுவை நடிகர் சூரியை வைத்து படம் இயக்கி வருகிறார்.
சத்தியமங்கலம் வனப்பகுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருவதாக முன்னர் செய்திகள் வெளிவந்தன.
இதுவரை பெயரிடப்படாத இந்த படத்தின் தலைப்பு குறித்து சில தகவல்கள் கசிந்துள்ளது.

அசுரன் திரைப்படம்
67வது தேசிய திரைப்பட விருதுகள் - சிறந்த இயக்குனருக்கான விருதை இயக்குனர் வெற்றிமாறன் அசுரன் திரைப்படத்திற்காக வென்றுள்ளார். சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான விருதை அசுரன் திரைப்படம் வென்றுள்ளது. படத்தின் நாயகன் தனுஷ் சிறந்த நடிகருக்கான விருதை வென்றார்.

பிஸியாக இயக்குனர்
சூரி நாயகனாக நடிக்கவுள்ள இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யாவின் வாடிவாசல், மீண்டும் தனுஷ் உடன் 5வது முறை கூட்டணி, இதனிடையே தளபதி விஜயுடன் ஒரு படம் என வரிசையாக படங்கள் உள்ளதால் மிகவும் பிஸியாக உள்ளார் இயக்குனர் வெற்றிமாறன்.

விஜய் சேதுபதி இணைந்தார்
நடிகர் சூரி நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். வெற்றிமாறனின் வடசென்னை படம் தவிர மற்ற படங்களுக்கு ஜீ.வி. பிரகாஷ் இசையமைத்த நிலையில் இந்த படத்திற்கு
இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.

படத்தின் தலைப்பு
ஜெயமோகன் எழுதிய துணைவன் நாவலின் கதையை தான் வெற்றிமாறன் படமாக இயக்கவுள்ளார். இதுவரை பெயரிடப்படாத இந்த படத்தின் தலைப்பு "விடுதலை" என சில தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











