என்னப்பா சொல்றீங்க... வனிதா விஜயக்குமார் மீண்டும் திருமணம், அரசியலில் வேறு குதிக்க போகிறாரா ?

சென்னை : கோலிவுட், சின்னத்திரையின் லேட்டஸ்ட் ஹாட் என்றால் அது வனிதா விஜயக்குமார் பற்றி தான். இவர் என்ன செய்தாலும் அது பரபரப்பாகி விடுகிறது. தற்போது புதிய வீடியோ ஒன்று வனிதா பற்றிய பரபரப்பை மேலும் எகிற வைத்துள்ளது.

விவாகரத்து, குடும்ப பிரச்சனை என ஆரம்பத்தில் மீடியாக்களில் பரபரப்பாக பேசப்பட்ட வனிதா விஜயக்குமார், பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சிக்கு பிறகு மிகவும் பிரபலமாகி விட்டார். அதில் வனிதாவின் சண்டை அந்த நிகழ்ச்சியின் டிஆர்பி.,யை எங்கோ கொண்டு சென்றது.

ரம்யா கிருஷ்ணனுடன் மோதல்

ரம்யா கிருஷ்ணனுடன் மோதல்

அதைத் தொடர்ந்து 3வது திருமணம், விவாகரத்து சினிமா என்ட்ரி, ரீசன்ட்ராக நடுவர் ரம்யா கிருஷ்ணனுடன் ஏற்பட்ட மோதலால் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறியது போன்றவற்றால் வனிதா விஜயக்குமார் தொடர்ந்து மீடியாக்களில் பேசப்படுபவர் ஆகி விட்டார்.

 வனிதாவின் எதிர்காலம் எப்படி

வனிதாவின் எதிர்காலம் எப்படி

இந்நிலையில் மற்றொரு பரபரப்பை கிளப்பும் விதமாக தனியார் சேனல் ஒன்று வனிதா விஜயக்குமார் பற்றி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளது. அதில் ஜோதிடர் ஒருவர் வனிதாவின் எதிர்காலம் பற்றி கணித்து சொல்லி உள்ளார். இது வனிதாவையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

மீண்டும் திருமணமா

மீண்டும் திருமணமா

அந்த வீடியோவில், வனிதா மீண்டும் திருமணம் செய்து கொள்வார். அவரது வருங்கால கணவரின் பெயர் எஸ் என்ற எழுத்தில் துவங்கும் என சொல்லி உள்ளார். மூன்று குழந்தைகளுக்கு தாயான வனிதா, ஏற்கனவே 3 முறை திருமணமாகி மூன்றும் விவாகரத்தில் முடிந்துவிட்டது.

அரசியலுக்கும் வருவாரா

அரசியலுக்கும் வருவாரா

அதுமட்டுமல்ல வனிதா, அரசியலிலும் நுழைந்து மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவை போல் மிகப் பெரிய தலைவராக ஜொலிப்பார் எனவும் அந்த ஜோதிடர் கணித்துள்ளார். செம வைரலாகி வரும் இந்த வீடியோவால் கோலிவுட்டே ஜர்க் ஆகி போய் உள்ளது.

வரிசைகட்டும் பட வாய்ப்புக்கள்

வரிசைகட்டும் பட வாய்ப்புக்கள்

வனிதா தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். பிரசாந்த் நடிக்கும் அந்தகன் படத்தில் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக நடிக்கிறார். தற்போது விஜய் டிவி நீயா நானா கோபிநாத்திற்கு ஜோடியாக மற்றொரு படத்தில் நடிக்க புக் ஆகி உள்ளார். இது தவிர வேறு சில படங்களிலும் வனிதா நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X