'விசுவாசம்' கதை இதுதானா? - க்ளூ கொடுத்த அஜித்!
சென்னை : சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான 'விவேகம்' படத்திற்குப் பிறகு அஜித் யார் இயக்கத்தில் நடிக்கப்போகிறார் எனும் கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.
சில நாட்களுக்கு முன், அஜித்தின் 58-வது படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க இருக்கும் தகவலும் சிவா இயக்கத்தில் உருவாகிறது எனும் அறிவிப்பும் அதிகாரப்பூர்வமாக வெளியானது.
இந்நிலையில், படத்தின் டைட்டில் நேற்று தயாரிப்புக் குழுவினர் சார்பாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்திற்கு 'விசுவாசம்' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

ரசிகர்களின் விருப்பம்
விவேகம் திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெறாததால், அடுத்த படத்தில் அஜித் சிவா இயக்கத்தில் நடிக்கக்கூடாது என ரசிகர்கள் விரும்பினர். ஆனால், மீண்டும் சிவா இயக்கத்தில் நடிக்கிறார் அஜித். விவேகத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸே தயாரிப்பதால் அதே கூட்டணி தொடர்கிறது.

முன்பே அறிவிக்கப்பட்ட டைட்டில்
சமீபத்திய அஜித் படங்களின் தலைப்பு எல்லாம் பாதி படத்திற்கு மேல் வளர்ந்த பின்னர்தான் வெளியாகின. ஆனால், அஜித்தின் 58-வது படமான இந்தப் படம் துவங்கும் முன்னரே 'விசுவாசம்' என அறிவித்துள்ளனர். இதுவே ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

பல சென்டிமென்ட்
வியாழக்கிழமை செண்டிமென்ட்டை அதிகமாகக் கடைபிடிப்பவர் அஜித் என்பதால், நேற்று அவரது புதிய படம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதோடு, 'வீரம்', 'வேதாளம்', 'விவேகம்' படங்களின் வரிசையில் சிவாவோடு இணையும் இந்தப்படத்தின் டைட்டிலும் 'V' வரிசையில் தொடங்கி 'M'' ல் முடிவடைகிறது.

விசுவாசம் கதை
இந்த நிலையில், 'விசுவாசம்' என்ற தலைப்பை கருத்தில் கொண்டு இந்த படமும் சென்டிமென்ட் கதையில் தான் உருவாகும் என்று கணிப்புகள் எழுந்துள்ளன. அஜித் யாரோ ஒருவருக்கு விசுவாசமான நண்பனாக இருப்பார். அவருக்கு துரோகம் செய்யும் சிலரை அழிப்பதுதான் இந்தப் படத்தின் கதையாக இருக்கக்கூடும்.

பாசத்தை மையமாக வைத்து
அஜித்தின் 'வீரம்' படம் சகோதர பாசத்தை மையமாகக் கொண்டு உருவானது. 'வேதாளம்', தங்கை பாசத்தை மையமாகக் கொண்டது. 'விவேகம்' படம் மனைவி பாசத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது. அந்த வரிசையில், 'விசுவாசம் படம்' ஃபேமிலி சென்ட்டிமென்ட் கதையில் உருவாகலாம் என்று கூறப்படுகிறது.

முந்தைய படங்களில் க்ளு
அஜித் தனது முந்தைய படங்களில், துரோகிகள் தன்னை முதுகில் குத்தியதாக டயலாக் பேசியிருக்கிறார். அதை ஒட்டியே 'விசுவாசம்' படத்தின் கதை நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனது துரோகிகளுக்கு விசுவாசம் என்பதை என்னவென உணரவைப்பதாக இந்தப் படத்தில் காட்சிகளும், வசனங்களும் இடம்பெறலாம்.


Click it and Unblock the Notifications











