Lal salaam - ஒன்னும் கவலைப்படாத.. லால் சலாம் பார்த்துவிட்டு மகளிடம் ரஜினிகாந்த் சொன்னது இதுவா?
சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக ஜெயிலர் திரைப்படம் வெளியானது. இதனையடுத்து வேட்டையன் படத்தில் நடித்துவருகிறார். இதற்கிடையே தனது மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தில் கெஸ்ட் ரோல் செய்திருக்கிறார். இதில் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். தற்போது படம் குறித்த புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.
இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 3 படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தனுஷ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றாலும் வசூல் ரீதியாக சரியாக போகவில்லை. இதனையடுத்து வை ராஜா வை படத்தை இயக்கினார். கௌதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படமும் சரியான வரவேற்பைப் பெறவில்லை.

லால் சலாம் இயக்கும் ஐஸ்வர்யா: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புதிதாக லால் சலாம் என்ற படத்தை இயக்கிவருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். படத்தின் ஷுட்டிங் திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் விறுவிறுப்பாக நடந்து முடிந்துவிட்டது. லால் சலாம் படத்தின் ஹைலைட்டாக ரஜினிகாந்த் இருக்கிறார்.
மொய்தீன் பாயாக ரஜினிகாந்த்: லால் சலாமில் மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் நடிக்கிறார். மும்பையில் அவர் தாதாவாக இருப்பார் என்றும் விஷ்ணு விஷாலையும், விக்ராந்த்தையும் ஒரு பிரச்னையில் இருந்து அவர் காப்பாற்றுவது போலவும் காட்சிகள் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் படத்தில் கபில்தேவும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. படம் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்படுகிறது.
க்ளிம்ப்ஸ்: ரஜினிகாந்த்தின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த 12ஆம் தேதி படத்திலிருந்து அவர் தொடர்பான க்ளிம்ப்ஸ் காட்சிகள் வெளியிடப்பட்டன. பக்கா ஆக்ஷன் காட்சிகள் அவருக்கு இருக்கின்றன. படத்தில் மொத்தம் 50 நிமிடங்கள் வரை அவர் வருவார் என ஏற்கனவே கூறப்பட்டிருக்கும் சூழலில் அந்த 50 நிமிடங்களும் மாஸாக இருக்கும் என்பதை க்ளிம்ப்ஸ் காட்சிகள் உணர்த்தின. அதேபோல் படத்தின் முதல் சிங்கிள் வெளியாகியும் ரசிகர்களிடம் பலமான வரவேற்பை பெற்றது.
எப்போது ரிலீஸ்?: இந்தப் படமானது பொங்கலுக்கு ரிலீஸாவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போயிருக்கிறது. அநேகமாக இந்த மாத இறுதியில் வெளியாகலாம் என கருதப்படுகிறது. படத்தின் சில பணிகள் பாக்கி இருந்ததுதான் ரிலீஸ் தள்ளிப்போனதற்கான காரணம் என்று கூறப்படுகிறது. இந்த சூழலில் லால் சலாம் படத்தை பார்த்துவிட்டு ரஜினிகாந்த் ஐஸ்வர்யாவிடம் சொன்ன விஷயம் குறித்து புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.
என்ன சொன்னார்?: அதாவது லால் சலாமில் மிச்சம் இருந்த பணிகளையும் முடித்துவிட்டு ரஜினிகாந்த்துக்கு ஐஸ்வர்யா படத்தை போட்டு காண்பித்தாராம். படத்தை பார்த்த ரஜினிக்கு ரொம்பவே திருப்தியாம். மேலும் ஒன்றும் கவலைப்பட வேண்டாம். இந்தப் படம் எப்போது ரிலீஸ் ஆனாலும் கண்டிப்பாக ஹிட் ஆகும் என்று கூறினாராம். இதனை கேட்ட ஐஸ்வர்யா உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது.
அப்செட்டான ரஜினி?: இதற்கிடையே சில நாட்களுக்கு முன்பு ஒரு தகவல் வெளியானது. அது என்னவென்றால் படத்தை பார்த்த ரஜினிக்கு அவ்வளவாக திருப்தியில்லை என்றும் இதனால் ரொம்பவே அப்செட்டாகிவிட்டதாகவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கபில்தேவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரும், ரஜினிகாந்த்தும் இருக்கும் புகைப்படத்தை படக்குழு வெளியிட்டிருந்தது.


Click it and Unblock the Notifications











