»   »  த்ரிஷா மருத்துவமனையில் அனுமதியா?: அம்மா உமா விளக்கம்

த்ரிஷா மருத்துவமனையில் அனுமதியா?: அம்மா உமா விளக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை த்ரிஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி குறித்து அவரின் தாய் உமா விளக்கம் அளித்துள்ளார்.

கோலிவுட்டின் சீனியர் ஹீரோயின்களில் ஒருவர் த்ரிஷா. எத்தனை இளம் நாயகிகள் வந்தாலும் அவருக்கு இருக்கும் மவுசு அப்படியே தான் உள்ளது. அதனால் தான் அம்மணி கை நிறைய படங்கள் வைத்துள்ளார்.

இந்த ஆண்டு முழுவதும் த்ரிஷா ரொம்ப பிசி.

த்ரிஷா

த்ரிஷா

த்ரிஷாவுக்கு உணவு ஒவ்வாமை ஏற்பட்டு அவர் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.

மயக்கம்

மயக்கம்

உணவு ஒவ்வாமை அல்ல ஓய்வில்லாமல் தொடர்ந்து நடித்துக் கொண்டிருப்பதால் த்ரிஷா படப்பிடிப்பு நடக்கும்போது மயங்கி விழுந்துவிட்டார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் கூறப்பட்டது.

உமா

உமா

என் மகள் சதுரங்க வேட்டை 2 படப்பிடிப்பிற்காக மலேசியா சென்றுள்ளார். அங்கு அவர் அரவிந்த் சாமியுடன் நடித்துக் கொண்டிருக்கிறார். ஹைதராபாத் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதில் உண்மை இல்லை என்றார் த்ரிஷாவின் தாய் உமா.

நயன்தாரா

நயன்தாரா

த்ரிஷாவும் நயன்தாரா வழியில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Trisha's mother Uma said that her actress daughter is not hospitalised and acting with Arvindswami in Malaysia for the upcoming movie Sathuranga Vettai 2.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil